பெரணமல்லூர்
பெரணமல்லூர் (ஆங்கிலம்:Peranamallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் பேரூராட்சியும் ஆகும். இது வந்தவாசி (சட்டமன்றத் தொகுதிக்கும்), ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
பெரணமல்லூர் PERANAMALLUR | |
---|---|
தேர்வு நிலை பேரூராட்சி | |
![]() ![]() பெரணமல்லூர் ![]() ![]() பெரணமல்லூர் | |
ஆள்கூறுகள்: 12.5680816°N 79.4346349°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | செய்யாறு |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
நிர்மாணித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை பேரூராட்சி |
• Body | பெரணமல்லூர் பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 15.02 |
பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,801 |
• அடர்த்தி | 390 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | TN 97 |
ஊராட்சி ஒன்றியம் | பெரணமல்லூர் |
சென்னையிலிருந்து தொலைவு | 129 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 66 கி.மீ |
வந்தவாசியிலிருந்து தொலைவு | 25 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 22 கிமீ |
செய்யாறிலிருந்து தொலைவு | 26 கிமீ |
இணையதளம் | பெரணமல்லூர் பேரூராட்சி |
பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம், 1999-ம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது.மேலும் பிரசித்தி பெற்ற செங்கம்பூண்டி சித்தாத்தூர் அம்மன் ஆலயம் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
அமைவிடம்
திருவண்ணாமலையிலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே வந்தவாசி 23 கிமீ; மேற்கே ஆரணி 22 கிமீ; வடக்கே செய்யாறு 25 கிமீ மற்றும் தெற்கில் பெரிய கொழப்பலூர் 14 கிமீ தொலைவிலும், தேசூர் 23 கிமீ தொலைவிலும் உள்ளது.இங்கிருந்து சென்னை, தாம்பரம்,புதுச்சேரி,காஞ்சிபுரம்,திண்டிவனம், பெங்களூரு,வேலூர் போன்ற நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் உள்ளது
பேரூராட்சியின் அமைப்பு
15.02 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி சட்டமன்றத் தொகுதி க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [2] 2011 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை தமிழக சட்டமன்ற தொகுதியாக விளங்கியது.கேரளாவின் ஆளுநராக 27 அக்டோபர் 1982 முதல் 23 பெப்ரவரி 1988 வரை பதவி வகித்த பா.ராமச்சந்திரன் அவர்கள் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
நிர்வாகம் மற்றும் அரசியல்
இந்நகரம் இரண்டாம் நிலை பேரூராட்சியாகஇன்று வரை செயல்பட்டு வருகிறது. பெரணமல்லூர் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இந்த நகரை பெரணமல்லூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
பேரூராட்சி அதிகாரிகள் | |
---|---|
தலைவர் | |
ஆணையர் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
சட்டமன்ற உறுப்பினர் | திரு.எசு.அம்பேத்குமார் |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
மக்கள் தொகை பரவல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,801 மக்கள்தொகை கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர். [3]பெரும்பாலும் விவசாயம் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.57°N 79.43°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 135 மீட்டர் (442 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.பழமை வாய்ந்த சிவன் கோயில்,பெருமாள் கோயில்,வரத ஆஞ்சநேயர் கோயில்,எட்டியம்மன் ஆலயம்,கங்கை அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளது
கல்வி நிலையங்கள்
பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.


ஆதாரங்கள்
- "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
- பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
- Peranamallurm Population Census 2011
- "Peranamallur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
வெளி இணைப்புகள்