ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Arani Regional Transport Office, RTO) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டதாகும். தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது.

ஆரணி
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
பட்டு நகரம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
ஆரணி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 12.6751077°N 79.2843245°E / 12.6751077; 79.2843245
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வட்டாரப் போக்குவரத்து தலைமையிடம்ஆரணி TN 97
துணை மாவட்டம்ஆரணி
அடங்கியுள்ள வட்டங்கள்1.ஆரணி 2.சேத்துப்பட்டு 3.போளூர் 4.கலசப்பாக்கம் 5.சமுனாமரத்தூர் 6.செய்யாறு 7.வந்தவாசி 8.வெம்பாக்கம்
அரசு
  வகைவட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
  Bodyஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
  மக்களவை உறுப்பினர்எம்.கே.விஷ்ணுபிரசாத்
  சட்டமன்ற உறுப்பினர்சேவூர்.இராமச்சந்திரன்
  மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
  மொத்தம்13.64
ஏற்றம்171
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு632301, 632316
இந்தியாவில் தொலைபேசி எண்கள்04173
வாகனப் பதிவுTN 97

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டது ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகும். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வாகன ஆய்வாளர் போக்குவரத்து அலுவலகமாக திருவண்ணாமலை குறியீடு TN 25 மூலம் இயங்கி வந்தது. அதன் பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேவூர் ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் புதிய தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் குறியீடு TN 97 உருவாக்கப்பட்டது. தலைமை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையகம் ஆரணியில் அமைந்துள்ளது. இதன் கீழ் போளூர், ஆரணி, சேத்துப்பட்டு, சமுனாமரத்தூர், செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி , தெள்ளாறு ஆகிய தாலுக்காக்கள் உள்ளடக்கி அமைந்துள்ளது

மோட்டார் வாகன சட்டம்


வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO) இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால் நிருவகிக்கப்படும் அலுவலகம் ஆகும். இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயற்படுத்துவது இதன் பொறுப்பாகும்.இது மாநில அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகின்றது. இந்தியாவில் பதிவு இலக்கத்தகடுகளையும் ஓட்டுனர் உரிமங்களையும் வழங்குகிறது.

இந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளவை:-

  • குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் திறனுடன் வழங்குதல்;
  • வண்டிகள் மீதான அனைத்து வரிகளையும் கட்டணங்களையும் எவ்விதக் கசிவுமின்றி வசூலித்து அரசின் வருமானத்தைப் பெருக்குதல்;
  • சாலைப் பாதுகாப்பை கூட்டுதல் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குதல்;
  • வண்டிகளாலான மாசுபடிதலைக் குறைத்தல்.


சான்றுகள்


1. {https://m.youtube.com/watch?v=i0ZarBOsSHo} வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா

2. {http://nammaseithi.com/?p=11861} நம்ம செய்தி மூலம் படித்தது

3. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.