இராசிபுரம்

இராசிபுரம் (ஆங்கிலம்:Rasipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் முதல் நிலை நகராட்சி ஆகும். இவ்வூரின் பெயர் ஸ்ரீ ராஜபுரம் எனப்பழங்காலத்தில் வழங்கப்பட்டதாக அங்கு அமைந்துள்ள கைலாச நாதர் கோயில் கல்வெட்டுகள் குறிக்கின்றன.

இராசிபுரம்
  முதல் நிலை நகராட்சி்  
இராசிபுரம்
இருப்பிடம்: இராசிபுரம்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 11°28′N 78°10′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
நகராட்சித் தலைவர் பாலசுப்ரமணியம்
ஆணையர் கு. தனலட்சுமி
மக்களவைத் தொகுதி இராசிபுரம்
சட்டமன்றத் தொகுதி இராசிபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

சரோஜா (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

46,370 (2001)

5,684/km2 (14,721/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.158 சதுர கிலோமீட்டர்கள் (3.150 sq mi)
இணையதளம் www.municipality.tn.gov.in/rasipuram

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.47°N 78.17°E / 11.47; 78.17 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 246 மீட்டர் (807 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,370 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இராசிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இராசிபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 உள்ளாட்சி தேர்தல்

2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் ம. பாலசுப்ரமணியம் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர்கட்சிபெற்ற வாக்குகள்
கணபதி கிசுயேச்சை145
குமார் சுபாஜக273
சாந்தி அரசுயேச்சை143
தங்கவேல் அமதிமுக462
தர்மராஜா இரா.ததேமுதிக1793
தாஜ்முகம்மது ஷாகாங்கிரசு477
நல்வினை செல்வன் விபாமக577
பாலசுப்ரமணியம் மஅதிமுக12564
பிரபாகரன் மாசுயேச்சை90
மாதேஸ்வரன் நவிடுதலைச் சிறுத்தைகள்102
விஜயன் கோஇந்திய ஜனநாயகக் கட்சி83
வெங்கடாசலம் கசுயேச்சை110

ஆதாரங்கள்

  1. "Rasipuram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.