முக்கூடல்

பெயர்க் காரணம்

தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு மற்றும் கடநா நதிகள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப்பெயராயிற்று.

அமைவிடம்

முக்கூடல் பேரூராட்சிக்கு கிழக்கே திருநெல்வேலி (20 கிமீ); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கிமீ); வடக்கே ஆலங்குளம் (19 கிமீ); தெற்கே சேரன்மாதேவி (11 கிமீ) தொலைவிலும் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.36 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6298 வீடுகளும், 14,983 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

கோயில்கள்

ஆதாரங்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.