சேரன்மகாதேவி
சேரன்மகாதேவி (Cheranmahadevi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
சேரன்மகாதேவி | |
அமைவிடம் | 8°41′N 77°34′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | சேரன்மாதேவி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
மக்களவைத் தொகுதி | சேரன்மகாதேவி |
மக்கள் தொகை • அடர்த்தி |
18,327 (2011) • 2,156/km2 (5,584/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/cheranmahadevi |
இவ்வூரில் நவகைலாயங்களில் ஓன்றான சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் உள்ளது. தாமிரபணி ஆற்று கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி 650 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
அமைவிடம்
திருநெல்வேலி - பாபநாசம் செல்லும் பாதையில், திருநெல்வேலியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு சேரன்மாதேவி தொடருந்து நிலையம் உள்ளது. [1]
அருகமைந்த ஊர்கள்
சேரன்மாதேவிக்கு கிழக்கில் 2 கிமீ தொலைவில் பத்தமடையும், மேற்கில் 6 கிமீ தொலைவில் வீரவநல்லூரும், வடக்கே 9 கிமீ தொலைவில் முக்கூடலும், தெற்கே 25 கிமீ தொலைவில் களக்காடும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 4,756 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும் கொண்டது.[3]
முக்கிய பிரமுகர்கள்
- வழக்கறிஞர் பி. எச். பாண்டியன் - முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர்
- வழக்கறிஞர் பி. எச். மனோஜ் பாண்டியன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- இரா. ஆவுடையப்பன் - முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர்
கோவில்கள்
மூலக்கோவில், அப்பன் வெங்கடாசலபதி கிருஷ்ணன் கோவில், வைத்தியநாத சுவாமி கோவில், ராமசாமி கோவில், நடூவூரளப்பர் கோவில், பத்மவச்சல்ர் கோவில், அம்மைநாத சுவாமி கோவில், மிளகு பிள்ளையார் கோவில், அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில்
ஆதாரங்கள்
- SMD/Cheranmahadevi சேரன்மகாதேவி தொடருந்து நிலையம்
- பேரூராட்சியின் இணையதளம்
- பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்