சோளிங்கர்

சோளிங்கர் (திருக்கடிகை)(ஆங்கிலம்:Sholinghur) இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் இங்குள்ளது. சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சோளிங்கரில் இயங்குகிறது. பண்டைய காலத்தில் இந்நகரம் சோழர்களாலும் பின்பு ஆற்காடு நவாப் மற்றும் திப்பு சுல்தானாலும் ஆளப்பட்டது.

சோளிங்கர்
  city  
சோளிங்கர்
இருப்பிடம்: சோளிங்கர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°07′N 79°25′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் S. திவ்யதர்ஷினி, இ. ஆ. ப.
மக்கள் தொகை

அடர்த்தி

30,856 (2011)

1,543/km2 (3,996/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

20 கிமீ2 (8 சதுர மைல்)

155 மீட்டர்கள் (509 ft)

இணையதளம் www.townpanchayat.in/sholinghur

அமைவிடம்

சோளிங்கர் பேரூராட்சிக்கு தெற்கே வேலூர் 60 கிமீ; வடக்கே திருத்தணி 30 கிமீ; கிழக்கே அரக்கோணம் 30 கிமீ; மேற்கே சித்தூர் 45 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

9.50 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 236 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,359 வீடுகளும், 30,856 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.61% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1002 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

பெயர் தோற்றம் மற்றும் வரலாறு

சோழர்கள் ஆட்சிகாலத்தில் சோழசிம்மபுரம் என்றும் பின்பு காலபோக்கில் சோழாலிங்கபுரமாகவும் அழைக்கப்பட்ட இந்நகரம் இன்று சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

சோளிங்கர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் போது சர் ஐர் கூட் (Sir Eyre Coote) திப்பு சுல்தானுடன் இங்கு போர் புரிந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியர்களுக்கும் ஹைதர் அலி தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி.பி 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கஞ்சா சாகிப் கல்லறை இங்கு உள்ளது.

சாமுவேல் டேவிஸ் என்பவர் சோளிங்கரை வரைந்த ஓவியம்

சோளிங்கரில் உள்ள தொழிற்சாலைகள்

  1. பாரதி பேருந்து குழுமம்.
  2. டி.வி.எஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா லிட்[5]
  3. சோளிங்கர் நூற்பாலை
  4. சிறு நிலை தறி தொழிற்சாலைகள்.

கல்வி நிறுவனங்கள்

கல்லூரிகள்

  1. சரஸ்வதி வேலு பொறியியல் கல்லூரி
  2. சரஸ்வதி வேலு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  3. சி எம் அண்ணாமலை பல்தொழில்நுட்ப கல்லூரி
  4. மீரா ஆசிரியர் பயிற்சி நிலையம்
  5. கலைபாரதி ஆசிரியர் பயிற்சி நிலையம்
  6. சிவரஞ்சினி ஆசிரியர் பயிற்சி நிலையம்

பள்ளிகள்

  1. குட்லெட் மேனிலைப்பள்ளி
  2. அஸ்வினி மெட்ரிக் பள்ளி
  3. அய்யன் வித்யாஷரம் மெட்ரிக் பள்ளி
  4. அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி
  5. அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி
  6. ஹயக்ரீவர் மழலைகள் பள்ளி
  7. மேரி மெக்ளின் நடுநிலை பள்ளி
  8. செங்குந்தர் நடுநிலை பள்ளி
  9. ஸ்ரீ திவ்யா சைதன்யா மெட்ரிக் பள்ளி
  10. யூனிட்டி மெட்ரிக் பள்ளி
  11. வேதாத்ரி மெட்ரிக் பள்ளி
  12. வித்யா பீடம்

மருத்துவமனைகள்

  1. அரசு மருத்துவமனை, சோளிங்கர்
  2. கல்பனா மருத்துவமனை
  3. பாரதி வெங்கடேஷ் மருத்துவமனை
  4. டி.வி.எஸ் மருத்துவமனை
  5. பெஸ்ட் மருத்துவமனை
  6. ரவிபாரதி மருத்துவமனை

கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தளங்கள்

லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரும் லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலுக்கு இட்டுச்செல்லும் படிகளும் தூரத்துக்காட்சி
கோவிலுக்கு ஏறும் நடுவழியிலிருந்து லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலின் ஒரு காட்சி
லக்ஷ்மி நரசிம்ம சாமி கோவிலிலிருந்து பார்க்கையில் சோளிங்கர் நகரின் தூரத்துக்காட்சி

போக்குவரத்து

பரபரப்பாக காட்சியளிக்கும் சோளிங்கர் பேருந்து நிலையம்

இவ்வூரிலிருந்து வேலூர், திருத்தணி, பொன்னை, சித்தூர், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் அரக்கோணம் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.