தஞ்சாவூர் மராத்திய அரசு
தஞ்சாவூர் மராத்திய அரசு சோழ மண்டலத்தை ஆண்ட மராத்தியர்களின் அரசாகும். இவர்களின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி என்பவர், தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.[2]
தஞ்சாவூர் மராத்திய அரசு தஞ்சாவூர் சுதேச சமஸ்தானம் | |||||
பேரரசாக 1674 முதல் 1799 முடிய. சுதேச சமஸ்தானமாக (1799–1855) | |||||
| |||||
![]() அமைவிடம் 1798இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மராத்திய அரசை கைப்பற்றும் போது, தஞ்சாவூர் மராத்திய அரசின் வரைபடம் | |||||
தலைநகரம் | தஞ்சாவூர் | ||||
மொழி(கள்) | மராத்தி, தமிழ் & தெலுங்கு | ||||
சமயம் | இந்து சமயம் | ||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||
அரசன் | |||||
- | 1674 - 1684 | வெங்கோஜி [1] | |||
- | 1832 - 1855 | தஞ்சாவூர் சிவாஜி | |||
வரலாறு | |||||
- | போன்சலே குலத்தின் ஏகோஜியால் வெற்றி கொள்ளப்பட்ட தஞ்சாவூர் | 1674 | |||
- | பழைய ஆவணங்கள் | 1674 | |||
- | குலைவு | 1855 | |||
தற்போதைய பகுதிகள் | தமிழ்நாடு, இந்தியா | ||||
Warning: Value not specified for "common_name" |- style="font-size: 85%;" | Warning: Value specified for "continent" does not comply[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்|]] |

தஞ்சாவூர் மாரத்திய அரசின் வரைபடம்

தஞ்சாவூர் அரண்மனையின் உட்காட்சி
சுதேச சமஸ்தானமாக
1799ல் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வீழ்ந்த தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 வரை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 முடிய விளங்கியது. [3]
கம்பெனி நேரடி ஆட்சியில்
மன்னர் தஞ்சாவூர் சிவாஜி ஆண் வாரிசு இன்றி 1855ல் இறந்தார். எனவே அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855ல் பிரித்தானியக் கிழக்ந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
- வெங்கோஜி என்ற ஏகோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசின் நிறுவனர்) 1674 - 1684
- முதலாம் சாகுஜி 1684-1712
- முதலாம் சரபோஜி 1712-1728
- துக்கோஜி 1728-1736
- இரண்டாம் வெங்கோஜி 1736–1737
- சுஜான்பாயி 1737 - 1738
- இரண்டாம் சாகுஜி 1738 - 1739
- இரண்டாம் சரபோஜி 1798-1832
- தஞ்சாவூர் சிவாஜி 1832-1855
மேற்கோள்கள்
- The Maratha Rajas of Tanjore by K.R.Subramanian, 1928.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.