முதலாம் சரபோஜி
முதலாம் சரபோஜி (English: Serfoji I; Marathi: सरफोजी १) (1675–1728) என்பவர் மராத்திய அரசரான தஞ்சாவூரின் முதலாம் ஏகோஜியின் புதல்வராவார். இவர் 1712 முதல் 1728 வரை தஞ்சையினை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார். இவர் மராத்திய ஆட்சிப்பகுதிகளை விரிவு படுத்தியதோடு பல இலக்கியங்கள் உருவாகவும் காரணமாயிருந்தார்.

தஞ்சையில் முதலாம் சரபோஜியின் உருவம்
இலக்கியம்
சிவபரதம் (Sivabharata) என்ற சமஸ்கிருத நூல் இவரின் முன்னோரான பேரரசர் வீர சிவாஜியின் வீரதீர பராக்கிரமங்களை உரைப்பதாகும். முதலாம் சரபோஜியின் காலத்தில் இது சிவாஜி சரித்திரம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது[1].
இவரது ஆட்சிக்காலத்தில் தான் அபிராமி பட்டர் வாழ்ந்து வந்தார் என்றும் அபிராமி அந்தாதி, அபிராமி அம்மைப் பதிகம் போன்ற நூல்களை இயற்றினார் என்றும் வரலாறு இயம்புகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.