இரண்டாம் வெங்கோஜி

இரண்டாம் எகோஜி போன்ஸ்லே (1694 அல்லது 1696-1737) என்கிற இரண்டாம் வெங்கோஜி என்பவர் போன்சலே வம்சத்தின் தஞ்சாவூர் மராத்திய மன்னன் துக்கோஜியின் மூத்த மகன் ஆவார். இவர் 1736இல் தனது தந்தையின் மரணத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சிக்காலம் மிகக்குறைவானது. உடல்நலக்குறைவு காரணமாக 1737-ல் மரணமடைந்தார்.

ஆட்சி

இரண்டாம் எகோஜி 1694 அல்லது 1696இல் சுக்குட்டியில் பிறந்தார். 1736இல் அரியனை ஏறி ஒரு வருடம் ஆட்சி புரிந்தார். 1736இல் படை எடுத்துவந்த சாந்தா சாஹிப்பை எதிர்த்து கடுமையாக போராடினார். 1737-ஆம் ஆண்டில் 41 அல்லது 43வது வயதில் ஈகோஜி உயிர் இழந்தார்.

மேற்கோள்

'The Maratha Rajas of Tanjore' by K.R.Subramanian, 1928.

முன்னர்
துக்கோஜி
தஞ்சாவூர் மராத்திய அரசர்
17361737
பின்னர்
சுஜான்பாயி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.