காட்டுயானம் (நெல்)

காட்டுயானம் (Kattu Yanam) கட்டுடை ஓணான் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் வழக்கொழிந்து போய் நம்மாழ்வார்அவர்களது இயற்கை விவசாய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது தலைஞாயிறு அருகே வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்ப. இராமக்கிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் நம்மாழ்வார் அவர்களிடம் தற்போது காட்டுயானம் [1]என்று அழைக்கப்பட்டு,நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய நெல் வகையான இது, மற்றப் பாரம்பரிய நெல் இரகங்களைவிட கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. எந்தத் தட்பவெப்ப நிலையிலும் விளையக்கூடிய இந்நெல் இரகம், வறட்சியிலும், வெள்ளத்திலும் மகசூல் கொடுக்கக்கூடியதாகும். ஏழு அடி உயரம் வரை வளரும் காட்டுயானம், யானையையும் மறைக்கக்கூடிய அளவிற்கு வளர்கிறது. (அதனாலேயே இந்த நெற்பயிர்க்கு “காட்டுயானம்” எனப் பெயர் பெற்றுள்ளது)[2]

காட்டுயானம்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

மருத்துவக் குணம்

ஏனையப் பாரம்பரிய நெல் வகைகளில், காட்டுயானம் கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள் [3]) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது.[2]

இந்தக் காட்டுயானம் பச்சரிசிக் கஞ்சியுடன் (Rice Porridge), கறிவேம்பு இலையை கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் புண் ஆருவதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுயானத்தின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது தொடர்பாக, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. |"பொக்கிஷம் தில்லைநாதன்". தி இந்து (தமிழ்) (© 09, 2019). பார்த்த நாள் 2019-06-09.
  2. "உடலுக்குத் தெம்பூட்டும் யாணம்". தி இந்து (தமிழ்) (© 03, 2015). பார்த்த நாள் 2016-12-23.
  3. ஒரு மண்டல விரதம்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.