ஆடுதுறை - 9 (நெல்)

ஏ டி டீ - 9 (ADT 9) பிரபலமாக பொன் கார் (Ponnkar) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 9
ADT 9
வேளாண் பெயர்
பொன் கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
4500 கிலோ எக்டேர்
வெளியீடு
1933
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1933 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4500 கிலோவரை ( 4.5 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் தானியமணிகள், தடித்து குட்டையாக உள்ளது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
  • ஆரம்ப குறுவை பருவத்தில் சாகுபடி செய்வதற்கு சிறந்த இரகமாக கருதப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-03.
  2. "Rice Knowledge Management Portal ADT 9". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-07-31.
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-08-03.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.