தங்கச் சம்பா (நெல்)

தங்கச் சம்பா (Thanga samba) சம்பா பட்டத்துக்கு (தமிழகத்தில் ஆகத்து மாதம் முதல் செப்டம்பர் வரை, சம்பா பட்டம்[3]) ஏற்ற பாரம்பரிய நெல் வகையான இது, நூற்றி முப்பது நாட்களிலிருந்து, நூற்றி முப்பந்தைந்து நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமான தங்கச் சம்பா, ஐந்தடி வரை வளரும் மோட்டா (தடித்த) இரகமாகும். மத்திய காலப் பயிராக கருதப்படும் இப்பயிர், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியதாகும்.[2]

தங்கச் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
130 – 135 நாட்கள்[1]
மகசூல்
ஏக்கருக்கு சுமார் 2250 கிலோ[2]
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

மரபும் மருந்தும்

தங்கச் சம்பா நெல்லைத் தூற்றும்போது, தங்கம் போல் மிளிரும் தன்மை காணப்படுவதால், இந்த நெல் இரகத்துக்கு `‘தங்கச் சம்பா’ என பெயர் வந்திருக்குமோ? எனக் கூறப்படுகிறது. சிவப்பு நிற நெல், மற்றும் சிவப்பு நிற அரிசியுடன் கூடிய இது, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ குணம் கொண்ட நெல் வகையாகும்.[2]

மகசூல்

பாரம்பரிய நெல் இரகங்களில் தங்கச் சம்பா நெல் அரிசியை, உணவு, மற்றும் பலகாரங்களுக்கு பயன்படுத்தி வந்தால், உடல் ஆரோக்கியத்துடனும், முகம் பொலிவுடனும், இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக்கூடியது. தமிழகத்தில் பரவலாக இந்த நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இருபது மூட்டை முதல், அதிகபட்சம் ஏக்கருக்கு முப்பது மூட்டைவரை மகசூல் ஈட்டப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.