நவரை (மீன் குடும்பம்)

நவரை (goatfish) என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் மொத்தம் 6 பேரினங்களாக மொத்தம் 88 இனங்கள் உள்ளன.[1] இவை உலகம் முழுவதும் உள்ள வெப்ப, வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நீர்ப்பகுதிகளில் வாழ்கின்றன. இவை அடிக்கடி நிறம் மாறும் திறன் கொண்டவை.

நவரை
மஞ்சள் துடுப்பு நவரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: கதிர்முள் துடுப்பி
வரிசை: கீளி வடிவி
குடும்பம்: நவரை

பண்புகள்

நவரை மீன்களிடம் ஆட்டுத்தாடி போன்ற இரு உணரிழைகள் காணப்படும். இந்த உணரிழைகள், நவரை மீன்களுக்கு மணல் மற்றும் பவளப்பாறை ஓட்டைகளில் உணவு தேட உதவும் வேதியியல் உணர்வி உறுப்புகளைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "FAMILY Details for Mullidae - Goatfishes". பார்த்த நாள் 5 April 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.