மத்தி (மீன்)

மத்தி (Sardine; pilchards) என்பது இந்திய கடற்பகுதியில் காணப்படும் ஒருவகை மீனினம் ஆகும். தமிழகத்தில் தென்மாவட்ட கடலோர மக்கள், கேரளா, கடலோர கர்நாடகா மற்றும் ஆந்திர மக்களால் விரும்பி உண்ணப்படும் மீனினமாகும். கடலூர் மாவட்டத்தில் மத்தி மீன்களே மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உள்ளது[1].

மத்தி மீன்
மத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: Clupeiformes
குடும்பம்: Clupeidae
துணைக்குடும்பம்: Clupeinae
உறவு: Sardine
பேரினம் (உயிரியல்)
  • Sardina
  • Sardinops
  • Sardinella

பெயர்கள்

இந்த மீன்கள் தமிழில் சாளை, மலையாளத்தில் மத்தி , தெலுங்கில் காவாலு, பெங்காலியில் கொய்ரா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சத்துக்கள்

ஒரு சிறிய மத்தியின் மூலம் மனிதனுக்கு 13% விட்டமின் பி2 (B2)-ம், 150% உயிர்ச்சத்து பி12-ம் கிடைக்கிறது. உயிர்ச்சத்து பி சத்துக்கள் நரம்பு மண்டலத்தைச் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. மேலும் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சிறிதளவு இரும்பு, செலீனியம் சத்துக்களும் கிடைக்கிறது. இதய நோய் ஏற்படுவதை குறைக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இந்த மத்தி மீன்களில் காணப்படுகின்றது. சமீபத்திய ஆய்வுகள் இவ்வகை கொழுப்பு அமிலங்கள் ஆல்சைமர் நோய் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை குறைத்து ஞாபக சக்தியை வளர்ப்பதாகவும் கூறுகிறது. மேலும் இவ்வகை கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் இனிப்பின் அளவை குறைந்த அளவில் வைக்க உதவுகின்றன. மேலும் இந்த மத்தி மீனில் உயிர்ச்சத்து டி, கால்சியம் மற்றும் புரதங்களும் அடங்கியுள்ளன.

மேற்கோள்கள்

  1. "தொடங்கியது மத்தி மீன் சீசன்". தினமணி. 12 பெப்ரவரி 2012. http://www.dinamani.com/tamilnadu/article838276.ece. பார்த்த நாள்: 27 அக்டோபர் 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.