மடவை

மடவை (ஆங்கிலம் : Mullets) என்பது கடலோர மிதவெப்ப மற்றும் வெப்பவலயப் பகுதியில் வாழும் மீன் குடும்பம் ஆகும்.[1] இவற்றில் சில இனங்கள் நன்னீரிலும் வாழ்கின்றன. இவை உணவிற்குப் பயன்படும் மீன்கள் ஆகும். ரோம் போன்ற நாடுகளில் இந்த மீன்களின் உணவு பிரதானமாக உட்கொள்ளப்படுகிறது. இந்த மீன் குடும்பத்தில் 20 பேரினங்களாக மொத்தம் 78 இனங்கள் உள்ளன.

மடவை
சாம்பல் நிற மடவை, Mugil cephalus
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: முகிலிபார்ம்ஸ்
குடும்பம்: முகிலிடே

மடவைகளின் தனித்தன்மையாக இரண்டு பெரிய முதுகுத் துடுப்பையும், சிறிய முக்கோண வடிவ வாயையும், முதுகுப் பகுதியில் ஒரே மாதிரியான கோடுகளையும் கொண்டு காணப்படுகிறது. [1]

நடுநிலக் கடல் பகுதியில் காணப்படும் மடவை மீன்கள்
மடவை மீனின் தோற்றம்
  1. Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. பக். 192. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-547665-5.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.