கிளி மீன்

கிளி மீன்கள் (Parrot fishes) என்பது சுமார் 95 மீன் இனங்களின் குழுவாகும். இவை ஸ்காரிடே குடும்பத்தைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றன.[1] இந்தோ - பசுபிக் பகுதிகளில் ஏறத்தாழ 95 இனங்கள் கொண்ட இந்த குழு அதிகமாக காணப்படுகின்றது. இவை பவளப் பாறை, பாறைக் கடற்கரைகள், கடற்புல் படுக்கைகள் என்பவற்றில் வசிக்கின்றன.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Scaridae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கிளி மீன்
Scarus frenatus
உயிரியல் வகைப்பாடு
Unrecognized taxon (fix): Scaridae
Genera

Bolbometopon
Calotomus
Cetoscarus
Chlorurus
Cryptotomus
Hipposcarus
Leptoscarus
Nicholsina
Scarus
Sparisoma

உருவ அமைப்பு

கிளி மீன்கள் ஏனைய மீன் இனங்களில் இருந்து பல் வரிசை அமைப்புக்கேற்ப வேறுப்படுத்தப்படுகின்றன.[2] அவற்றின் பற்கள் அவற்றின் தாடை எலும்புகளின் வெளிப்புற மேற்பரப்பில் இறுக்கமாக சித்திரவடிவில் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் கிளியின் அலகு போன்ற அமைப்பு உருவாக்கப்படுகின்றது. இதன் மூலம் அவை பவள மற்றும் பிற பாறை அடிப் பகுதிகளில் இருந்து அல்காக்களை பறிக்கின்றன.[3] கிளி மீன்களின் வளர்ச்சி இனங்களுக்கேற்ப வேறுபடுகின்றன. பெரும்பாலான இனங்கள் 30-50 செ.மீ (12-20 அங்குலம்) நீளத்தை எட்டுகின்றன. இருப்பினும், ஒரு சில இனங்கள் 1 மீ (3 அடி 3 அங்குலம்) க்கும் அதிகமான நீளத்தை அடைகின்றன.[4] பச்சை நிற கூனல்தலை கிளிமீன் 1.3 மீ (4 அடி 3 அங்குலம்) வரை வளர்ச்சி அடையலாம். இவற்றின. மிகச் சிறிய இனங்கள் நீல உதடு கிளி மீன்கள் ( கிரிப்டோடோமஸ் ரோஸஸ் ) ஆகும். இவை அதிகபட்ச அளவாக 13 செ.மீ (5.1 அங்குலம்) வளரக் கூடியவை.[5]

பாதுகாப்பு கவசம்

இராணி கிளி மீன் (ஸ்காரஸ் வெட்டுலா) உட்பட சில மீன் இனங்கள் தூங்குவதற்கு முன் குறிப்பாக இரவில் வாயிலிருந்து சளி போன்ற பதார்த்தத்தை சுரந்து அவற்றை மூடும் பாதுகாப்பு கூட்டை உருவாக்குகின்றன.[6] இதனது வாசனையினால் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. இவற்றின் தோல் மற்றுமொரு சளிப் போன்ற பதார்த்தத்தினால் மூடப்பட்டிருக்கும். இது உடல் சேதத்தை சரிசெய்யவும், ஒட்டுண்ணிகளை விரட்டவும், புற ஊதா ஒளியில் இருந்து பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது.[6]

உணவு

பெரும்பாலான கிளி மீன்கள் தாவரங்களை உண்ணும். இவை பிரதானமாக பாறைத் தாவரங்களையும் பாசிகளையும் உட்கொள்கின்றன.[7] மேலும் சிறிய முள்ளந்தண்டிலிகளையும், மக்கிய பதார்த்தாங்களையும், பாக்டிரியாக்களையும் உண்ணும்.[3] சில பெரிய கிளி மீன் இனங்கள் பச்சை கூனல்தலை கிளி மீன் (போல்போமெட்டோபன் முரிகாட்டம்) போன்றவை பவளப் பாறைகளில் காணப்படும் பவள மொட்டுக்களை உட்கொள்ளக் கூடியவை. பச்சை கூனல்தலை கிளி மீன் தவிர மற்ற அனைத்தும்  பவளப்பாறைகளை விட பாசிகள் மூடிய மேற்பரப்புகளை உண்ண விரும்புகின்றன. கரீபியன் பவளப்பாறைகளில் வாழும் கிளி மீன்கள் பிரதானமாக கடற்பஞ்சுக்களை உண்ணும்.[8]

வாழ்க்கை வட்டம்

கிளி மீன்களின் வளர்ச்சி சிக்கலானது. பெரும்பாலான இனங்கள் ஆரம்பக் கட்டத்தில் பெண்களாகவும், பின்னர் ஆண் இனமாகவும் மாறும். சில இனங்கள் தனித்தனி பாலினமாகவே வாழும். பெரும்பாலும் ஆரம்பக் கட்டத்தில் சிவப்பு, பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலும், முனைய கட்டத்தில் பச்சை அல்லது நீல நிறத்தில் பிரகாசமான இளஞ்சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் திட்டுகளுடன் காணப்படும். மத்திய தரைக்கடல் கிளி மீன்களில் முதிர்ந்த பெண் மீன் பிரகாசமான நிறத்திலும், முதிர்ந்த ஆண் மீன்கள் சாம்பல் நிறத்திலும் காணப்படும்.[9]

குறிப்புகள்

  1. Westneat, MW; Alfaro, ME (2005). "Phylogenetic relationships and evolutionary history of the reef fish family Labridae". Molecular Phylogenetics & Evolution. 36 (2): 370–90. doi:10.1016/j.ympev.2005.02.001. PMID 15955516.
  2. Ostéologie céphalique de deux poissons perroquets (Scaridae: Teleostei) TH Monod, JC Hureau, AE Bullock - Cybium, 1994 - Société française d'ichtyologie
  3. Choat, J.H. & Bellwood, D.R. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N. (eds.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 209–211. ISBN 978-0-12-547665-2.
  4. "Bolbometopon muricatum summary page" (en).
  5. "Cryptotomus roseus summary page" (en).
  6. ""Distribution of Ultraviolet-Absorbing Sunscreen Compounds Across the Body Surface of Two Species of Scaridae.".
  7. Bellwood, David R. (1994-07-14). "A phylogenetic study of the parrotfish family Scaridae (Pisces: Labroidea), with a revision of genera" (English).
  8. Dunlap, M; Pawlik, JR (1996). "Video-monitored predation by Caribbean reef fishes on an array of mangrove and reef sponges". Marine Biology. 126: 117–123. doi:10.1007/BF00571383.
  9. "Parrotfish | National Geographic" (en).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.