விரியன் மீன்

விரியன் மீன் (viperfish) என்பது கடல் மீன் பேரினமாகும். இந்த மீன்கள் ஊசிபோன்ற கூர்மையான நீண்ட பற்களும், குறுகிய தாடையும் கொண்டவை. பொதுவாக விரியன் மீன்கள் 30 செ.மீ முதல் 60 செ.மீ வரை (12 முதல் 24 இன்ச்) வரை வளரக்கூடியன. விரியன் மீன்கள் பகலில் குறைந்த ஆழத்தில் (250–5,000 அடிகள் [80–1,520 m]) இருக்கும், ஆனால் இரவு நேரத்தில் ஆழத்திற்கு சென்றுவிடும். இவை முதன்மையாக வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன. இவை தன் உடலின் கீழ்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள போட்டோபோர்சு என அழைக்கப்படும் ஒளி தயாரிப்பு உறுப்புகளைக் கொண்டு, தன் எல்லைக்குள் இரையைக் கவர்ந்து தாக்குவதாக நம்பப்படுகிறது.

விரியன் மீன்
புதைப்படிவ காலம்:11–0 Ma
PreЄ
Pg
N

Late Miocene to Present[1]
டானா விரியன் மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: Stomiiformes
குடும்பம்: Stomiidae
பேரினம்: Chauliodus
Bloch & J. G. Schneider, 1801
Species

See text.

விரியன் மீன்கள் கருப்பு, பச்சை, வெள்ளி நிறங்களில் வேறுபடுகின்றன. இந்த மீன்கள் தன் இரையை பிடிப்பதற்கு இதன் பாங் போன்ற பல் பயன்படுத்துகிறது. இதன் பற்கள் மிக நீண்டு உள்ளதால் இவற்றின் வாயை மூட இயலாது எப்போதும் திறந்தபடியே இருக்கும்.

இந்த மீன்கள் தங்கள் வாழிடங்களில் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழ்வதாக நம்பப்படுகிறது, ஆனால் அடைபட்ட நிலையில் ஒரு சில மணி நேரமே வாழ்கின்றன. இவற்றால் வினாடிக்கு தனது உடல் நீளத்தில் இரண்டு மடங்கு நீளம் என்ற வேகத்தில் நீந்த முடியும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த வேகம் உத்தியோகப்பூர்வ வேகம் அல்ல.

இவற்றைக் காணும்போது இதன் உடல் செதில்களால் மூடப்பட்டதுபோல காணப்பட்டுகின்றன. ஆனால் உண்மையில் இதன் உடலின் மேற்புறம் ஒளி ஊடுருவக்கூடிய மேல்பூச்சைக் கொண்டுள்ளன.[2]

மேற்கோள்கள்

  1. Jack Sepkoski (2004). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2008-01-08.
  2. Haffner, Rudolph E. (1952). "Zoogeography of the bathypelagic fish, Chauliodus". Systematic Zoology 1 (3): 113-133. doi:10.1093/sysbio/1.3.113. http://sysbio.oxfordjournals.org/content/1/3/113.extract.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.