மேக்கொங் மாகெளிறு

மேக்கொங் மாகெளிறு அல்லது மீகொங் கற்பிஸ் (Mekong giant catfish, உயிரியல் பெயர்: Pangasianodon gigas) என்பது கெளிறு வரிசையைச் சேர்ந்த பங்கசிற்றே குடும்ப மீன் வகையாகும். இது தெற்காசிய மீகொங் மேட்டுநிலத்தை அண்டிய நன்னீர் ஏரியைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

மீகொங் கற்பிஸ்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Actinopterygii
வரிசை: சுலிரிஃபோமியா
குடும்பம்: Pangasiidae
பேரினம்: Pangasianodon
Chevey, 1931
இனம்: P. gigas
இருசொற் பெயரீடு
Pangasianodon gigas
Chevey, 1931
வேறு பெயர்கள்

Pangasius paucidens
Fang & Chaux, 1949

இயல்புகள்

இது மிக வேகமாக அழிவுக்குள்ளாகும் ஒரு இனமாகும். இதனால் இது மீகொங் ஆற்றில் பாதுகாக்கப்படும் இனமாகக் கண்கணிக்கப்படுகிறது.[1] மிக வேகமாகப் பாய்ந்தோடக் கூடிய மிகப்பெரிய உடலமைப்பைக் கொண்ட நன்னீர் மீன்வகை இதுவாகும். சராசரியாக 3 மீட்டர் நீளமானது. உடல்நிறை 150-250 கிலோக்கிறாம் கொண்டது. கிற்னஸ் உலக சாதனைப் புத்தகப் பதிவுகளின்படி 10.5அடி (3.2மீட்டர்) மற்றும் 660இறாத்தல் (300kg), கொண்ட மீகொங் கற்பிஸ் மீன் மிகப்பெரிய நன்னீர் மீனாகப் பதிவாகியுள்ளது.[2] அருகிவரும் இவ்வினம் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் தெரியவில்லை. ஆயினும் மத்திய மீகொங் பகுதியில் சிறிய அளவில் பரவலாகக் காணப்படுகிறது.[3] அதிகளவில் வேட்டையாடப்படுதல் மற்றும் நீர் மாசடைதல் என்பன இவ்வினம் அருகிப்போகக் காரணமாகும்.

தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இவற்றைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. (Hogan et al. 2004, MGCCG, 2005)
  2. (Mydans et al. 2005, Hogan et al. 2004, Hogan et al. 2007)
  3. (Hogan et al. 2004)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.