ஏரி

ஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன.

அர்கெந்தீனா உள்ள ஏரி.
பைக்கால் ஏரி, கொள்ளளவின் அடிப்படையிலும் ஆழத்தின் அடிப்படையிலும் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.

இயற்கையாக அமைந்த ஏரிகள்

வகை அமைப்பு உருவான விதம் இருப்பிடம் (எ கா)
டெக்டோனிக் ஏரி (Tectonics) பூமித் தட்டுகளின் அசைவால் த்சோ-மோரிரி ஏரி (Tsomoriri) லடாக்
வேல்கனிக் ஏரி (Volcanic) எரிமலை வெடிப்புகளால் டவோடா ஏரி (Lake Towada)-ஜப்பான்
எயோலியன் ஏரி (Aeolian) தொடர் காற்று வீச்சால் சாம்பார் ஏரி (Sambhar Salt Lake) செய்ப்பூர்
புளுவியல் (Fluvial) தொடர் நீர் பாய்தலால் கபர்டால் ஏரி (Kabar Taal Lake) பீகார்
கிளாசியல் ஏரி (Glacial lake) பனிப் பாறைகளின் சரிவுகளால் சந்திராடால் ஏரி (Chandra Taal) இமயமலை
கோஸ்டல் ஏரி (Coastal) கடலோர இயக்கங்களால் பழவேற்காடு ஏரி சென்னை

[1]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "மடையர்களை போற்றுவோம்!". தி இந்து. பார்த்த நாள் 16 நவம்பர் 2015.

வெளியிணைப்புகள்

பூமியில் 11.7 கோடி ஏரிகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.