மேக்கொங் ஆறு

மேக்கொங் ஆறு (Mekong) உலகில் 11ஆம் மிக நீளமான ஆறு ஆகும். ஆசியாவிலும் 7ஆம் மிக நீளமான ஆறு. மொத்தத்தில் 4,350 கிமீ நீளம் கொண்டது. திபெத்தில் தொடங்கி சீனாவின் யுன்னான் மாகாணம், மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மற்றும் வியட்நாம் ஆகிய பிரதேசங்கள் வழியாக பாய்கிறது. வியட்நாமின் தென்கிழக்குப் பகுதியில் தென் சீனக்கடலில் கலக்கிறது.அறுபது மில்லியன் மக்கள் தண்ணீர் உணவு மற்றும் போக்குவரத்துக்காகவும் இந்த நதியைச் சார்ந்துள்ளனர் [1]. மேக்கொங் உலகின் அதிக மீன் வளமைகளை கொண்டுள்ளது. இது 795,000 கிமீ நீளமும் 2 307,000 ச.மைல் வடிநில பரப்பளவையும் கொண்டுள்ளது.ஆண்டொன்றுக்கு 457 km3 (110 மி. கன. அடி) நீர் இந்த ஆற்றின் வழியே பாய்கிறது.

மேக்கொங் (Mae Nam Khong)
Láncāng Jiāng, Mae Khaung, Mènam Khong, Mékôngk, Tonle Thom, Sông Cửu Long
மேக்கொங் ஆறு
நாடுகள்  திபெத்,
 சீனா,
 மியான்மர்,
 லாவோஸ்,
 தாய்லாந்து,
 கம்போடியா,
 வியட்நாம்
நீளம் 4,880 கிமீ (3,000 மைல்)
வடிநிலம் 7,95,000 கிமீ² (3,07,000 ச.மைல்)
வெளியேற்றம் தென் சீனா கடல்
 - சராசரி
 - maximum
மூலம் லாசாகொங்மா ஓடை
 - அமைவிடம் குவோசொங்மூசா மலை, சிங்ஹாய், சீனா
 - உயரம் 5,224 மீ (17,139 அடி)
கழிமுகம் மேக்கொங் டெல்டா
 - உயரம் 0 மீ (0 அடி)

உற்பத்தி

திபெத்து பீடபூமியில் உற்பத்தி ஆகும் மேக்கொங் ஆறு யுனான் மாகானம் மியான்மர் லாவோஸ் தாய்லாந்து கம்போடியா மற்றும் வியட்னாம் நாடுகளின் வழியே பாய்கிறது.1995 ஆம் ஆண்டில் லாவோஸ் தாய்லாந்து கம்போடியா வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளால் “மேகாங் நதி ஆணையம்” Mekong River Commission ) அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு மேக்கொங் ஆற்றின் வளங்களை கூட்டாக மேலாண்மை செய்தல் மற்றும் பயன்படுத்துதல் பணிகளைச் செய்கிறது. 1996 ஆம் ஆண்டில் சீனா மற்றும் பர்மா (மியன்மார்) “மேக்கொங் நதி ஆணையம்” (MRC) இன் "பேச்சுவார்த்தை கூட்டாளி" என்ற நிலையில் இணைந்தன. தற்பொழுது இந்த ஆறு நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுகின்றன.

அசாதாரனமான காலநிலை வேறுபாடுகள் மற்றும் மேகாங் ஆற்று நீரோட்டங்கள் இவ்வாற்றின் வழிசெலுத்தல் கடினமாகிறது. இருந்த போதிலும் மேகாங் ஆறு மேற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிடையே முக்கிய நீர்வழி வர்த்தகப் பாதையாக உள்ளது.

பெயர்கள்

ஆங்கிலத்தில் "மேக்கொங் ஆறு" "Mekong River", என்று அழைக்கப்படுகிறது. இது "Mae Nam Khong" என்ற தாய் [Thai]மற்றும் லாவோ மொழியில் உள்ள சொற்கள் ஆகும்.

மேக்கொங் ஆறு பல நாடுகளில் வழியாக பாய்வதால், அது உள்ளூர் மொழிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது:

மூலம்

மேக்கொங் ஆறு நடுவண் ஆசியாவில் உள்ள திபெத்து மேட்டுச் சமவெளியில் ஸ-ஹூ (Za Qu) என்ற இடத்தில் உற்பத்தி ஆகி பின் லான்ஹாங் Lancang (Lantsang) என்ற பெயரில் ஆறாக உருவெடுக்கிறது. சஞ்ஜியாங்ஹூயான் தேசிய இயற்கை காப்பகத்தின் Sanjiangyuan National Nature Reserve எல்லைக்குள் வரும் இப்பகுதி மஞ்சள் ஆறு the Yellow (Huang He), மேகாங் the Mekong, மற்றும் யாங்ஸூ the Yangtze Rivers ஆகிய மூன்று நதிகளின் பிறப்பிட மூலமாக உள்ளது. திபெத்திய தன்னாட்சிப்பகுதி பகுதியில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு தென்கிழக்கு திசை நோக்கி பயணித்து சீனாவின் யுனான் மாகனத்தில் உள்ள ஹெங்டுவான் மலைகளின் Hengduan Mountains ஊடாக செல்கிறது. பின்னர் சீனா மியான்மர் Burma (Myanmar) மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லை சந்திப்பை கடந்து கம்போடியா தாய்லாந்து நாட்டுகளின் எல்லைகளுக்குள் நுழைகிறது.இறுதியாக வியட்னாம் நாட்டை கடந்து தென்சீனக் கடலில் கலக்கிறது.

மேக்கொங் ஆற்றுப்படுகை

மேக்கொங் ஆறு - பொளஷி Phou si
மேகாங் ஆறு மற்றும் நாம் ஒள Nam Ou ஆறு சங்கமம் லாவோஸ் Laos.

மேகாங் ஆற்றுப்படுகை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[2]

மேக்கொங் உயர் படுகை

சீனாவின் திபெத்து பகுதி 'மேக்கொங் உயர் படுகை' என்று அழைக்கப்படுகிறது மேக்கொங் உற்பத்தி புள்ளியில் இருந்து 2,200 கிமீ (1,400 மைல்) தூரம் மேக்கொங் உயர் படுகை நீழ்கிறது.உயர் படுகை மேக்கொங்கின் மொத்த பரப்பளவில் 24% வரை உள்ளது. அந்த தண்ணீர் 15 முதல் 20% பங்களிக்கிறது. இங்கே நீர்ப்பிடிப்பு பகுதிகள் செங்குத்தான மற்றும் குறுகியதாக உள்ளது. உயர் வடிநிலப்பகுதியில் மண் அரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது மேக்கொங் ஆற்றில் வண்டல் மண் சுமார் 50% உயர் படுகையிலிருந்து வருகிறது.

மேக்கொங் கீழ் படுகை

சீனவின் யுனான் மாகனம் முதல் தென் சீனக் கடல் வரை உள்ள பகுதிகள் 'மேக்கொங் கீழ் படுகை' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு மேக்கொங் உயர் வடிநிலப்பகுதியிலிருந்து 4,500 மீட்டர் (14,800 அடி) சரிவாக தாய்லாந்து, லாவோஸ், சீனா மற்றும் பர்மா (மியன்மார்) நாடுகளின் எல்லைகளை குறிக்கும் “தங்க முக்கோனம்” என்றழைக்கப்படும் பகுதியில் பாய்கிறது. அடுத்து மேக்கொங் ஆறானது லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் 2,600 கிலோமீட்டர் (1,600 மைல்) தொலைவுக்கு பயனித்து இறுதியாக வியட்நாம் [2] நாட்டில் ஒரு சிக்கலான கழிமுக Mekong_Delta துவாரப்பகுதிகளின் வழியாக தென் சீன கடலில் கலக்கிறது .

மேக்கொங் ஆற்று நீர் படுகை பரப்புகள்

அட்டவணை 1: நாடுகள் வாரியாக மேக்கொங் ஆற்றின் எல்லைப் பங்கீட்டு விவரம்[2]

சீனாபர்மா (மியான்மர்)லாவோ PDRதாய்லாந்துகம்போடியாவியட்நாம்மொத்தம்
வடி நிலப்பரப்பு (km2)165,00024,000202,000184,000155,00065,000795,000
நீர்ப்பிடிப்பு சதவீதத்தில் % of MRB2132523208100
பாசனப்பரப்பு சதவீதத்தில் % of MRB16235181811100

மேலாண்மை மற்றும் பயன்பாடுகள்

அணைகள் மற்றும் கட்டுமானங்கள்

அணைகள் மற்றும் புனல் மின்சாரம்

மேக்கொங் ஆற்றின் குறுக்கே ஏற்கனவே பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல அணைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.மேக்கொங் கீழ் வடிநில புனல் மின் திறன் (அதாவது சீனா தவிர்த்து) 30,000 மெகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளது , மேக்கொங் உயர் வடிநிலப்பகுதியில் 28.930 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.

புனல் மின் கட்டமைப்புகள்

ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணைகளின் விவரம் அட்டவணை 1:

Table 1: Commissioned dams in the Mekong River Basin (more than 10 MW)

திட்டம்நாடுகள்ஆறுஅமைவிடம்பயன்பாட்டுக்கு வந்த ஆண்டுமின் நிறுவுதிறன் (MW)உயரம் (m)குறுக்களவு (m)கொள்ளளவு (million m3)Max அணைக்கட்டு பரப்பளவு (km2)
DachaoshanCHNமேக்கொங்24°1′27.80″N 100°22′10.77″E20031,350118481367826
GongguoqiaoCHNமேக்கொங்25°36′43.7″N 99°17′45.6″E2008750130356120343
NuozhaduCHNமேக்கொங்22°39′22″N 100°25′06″E20145,850261.560821.749320
JinghongCHNமேக்கொங்22°3′6.50″N 100°46′1.96″E20101,750108705.5249510
ManwanCHNமேக்கொங்24°37′19.51″N 100°26′54.76″E19921,550136418257415
Houay HoLAOHouayho/Xekong15°3′34.17″N 106°45′51.39″E19991507962037
Nam LeukLAONam Leuk/Nam Ngum18°26′16.41″N 102°56′04″E20006045800185
Nam Lik 2LAONam Lik18°49′4.63″N 102°7′42.73″E20101033288.2624.4
Nam Ngum 1LAONam Ngum18°31′49.82″N 102°32′50.39″E1971148.7754687,000370
Nam Ngum 2LAONam Ngum18.9213°N 102.7404°E / 18.9213; 102.7404 (Nam Ngum 2 Dam)20116151814212,970122.2
Nam Theun 2LAONam Theun/Xe Bangfai17°59′50.47″N 104°57′8.30″E20101,075483253,680450
Theun-HinbounLAONam Theun/Nam Gnouang18°15′39.62″N 104°33′45.09″E1998/2012500245105
Xeset 1LAOXeset15.49200°N 106.27867°E / 15.49200; 106.27867 (Xeset 1 Dam)1994450.5
Xeset 2LAOXesetSaravan Province, Lao PDR20097620
Buon KuopCAMSre Pok12°31′39″N 107°55′19″E200928037
Buon Tua SraCAMSe San/Kroong Po Ko12°16′40.66″N 108°2′34.98″E200986
Dray Hinh 1VNSre PokDak Lak Province, Viet Nam199012
Dray Hinh 2VNSre Pok12°40′31.78″N 107°54′13.00″E200716
Plei KrongVNSe San/Kroong Po Ko14°24′41.38″N 107°51′51.48″E20081006574516280
Sesan 3VNSesan14°13′19.98″N 107°47′43.05″E2006791646.4
Sesan 3AVNSesan14°12′55.13″N 107°43′20.15″E200796
Sesan 4VNSesan14°6′23.02″N 107°39′28.08″E20093606054
Sre Pok 3VNSre Pok12°45′2.78″N 107°52′34.32″E200922052.5
Yali FallsVNSesan14°13′38.93″N 107°49′46.55″E2001720651,4601,03764.5
ChulabhornTHLNam Phrom16°32′10.56″N 101°39′0.13″E1972407070018831
Pak MunTHLMun15°16′54.82″N 105°28′5.01″E199413617300
SirindhornTHLLam Dom Noi15°12′22.82″N 105°25′44.96″E197136429401967288
Ubol RatanaTHLNam Pong16°46′31.42″N 102°37′5.97″E196625.235.18852,263410
Hua NaTHLHuay Kaosan199417207
Lam Phra PhloengTHLLam Phra Phloeng196711145
Lam Ta KhongTHLLam Ta Khong15°12′22.82″N 105°25′44.96″E200250040.32512911,430

மீன்பிடித்தொழில்

மேக்கொங் ஆற்றில் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த மீன் இனங்கள் கணப்படுகின்றன.இப்பகுதி மக்களுக்கு உணவு மற்றும் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாக மேக்கொங் திகழ்கிறது.[3][4] ஏராளமான மீன் வகைகள் தவிர நன்னீர் நண்டுகள், இறால், பாம்புகள், ஆமைகள், மற்றும் தவளைகள் போன்ற 'பிற நீர்வாழ் விலங்குகள்' (OAAs) வருமானத்திற்கான ஆதாரங்களாக உள்ளன [5][6].

மேக்கொங் ஆற்று வடி நிலப்பகுதி உலகின் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான உள்நாட்டு மீன்வளம் உற்பத்தி தளமாக உள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி ஒரு ஆண்டுக்கு 2 மில்லியன் டன் மீன்கள் , கிட்டத்தட்ட 500,000 டன் பிற நீர்வாழ் விலங்குகள் பிடிக்கப்படுகின்றன.

உயிரியல் வளம்

மேக்கொங் ஆற்றுப்படுகை உயிரினவளம் மிக்கது. இங்கு கடந்த பத்தாண்டுகளில் 1068 புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன [7]

இயற்கை வளம் மற்றும் பல்லுயிர் பன்மயம்

அமேசான் க்கு பிறகு உலகின் இரண்டாவது மிக உயர்ந்த ஆற்று நீர் பல்லுயிர் பன்மய வளமைப் பெருக்கத்தலமாக . மேக்கொங் உள்ளது.[3][8] The Mekong boasts the most concentrated biodiversity per hectare of any river.[9] 20,000 தாவர இனங்கள், 430 பாலூட்டிகள் 1,200 பறவைகள், 800 ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன [3] உயிரிகள், Greater Mekong Subregion ல் (ஜி.எம்.எஸ்) மதிப்பீடுகள் [8] மற்றும் ஒரு மதிப்பீட்டின்படி 850 நன்னீர் மீன் இனங்கள் (முக்கியமாக உப்பு அல்லது உப்பு நீர், அத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் காணப்படுகின்றன பரந்த உப்புநிலை மாற்றத்திற்கிசைவான இனங்கள்) தவிர்த்து. [9] நதி படுகை உள்ள நன்னீர் மீன் இனங்களில் மிகவும் செழுமை வாய்ந்த சைப்ரினிபாம்ஸ் cypriniforms (377 இனங்கள்) மற்றும் கெளுத்தி (92 இனங்கள்) உள்ளன.

சைப்ரினிபாம்ஸ் இனத்தை சேர்ந்த கார்ப்பு கெண்டை மீன் (Cyprinus carpio, Cyprinidae: Cyprininae)
A true loach: the spined loach, Cobitis taenia
மேக்கொங் ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்கள்.Vĩnh Long market, Việt Nam வியட்நாம்
மேக்கொங் ஆற்றில் காணப்படும் அயிரை வகை மீன்

நீர்வழிப்போக்குவரத்து

மேற்கோள்கள்

  1. https://www.internationalrivers.org/campaigns/mekong-lancang-river
  2. Mekong River Commission (2005). "Overview of the Hydrology of the Mekong Basin" (PDF). MRC, Vientiane, Laos.
  3. International Center for Environmental Management (2010). "Strategic Environmental Assessment (SEA) of hydropower on the Mekong mainstream" (PDF). Mekong River Commission.
  4. E. Baran & C. Myschowoda (2009). "Dams and fisheries in the Mekong Basin". Aquatic Ecosystem Health and Management 12 (3): 227–234. doi:10.1080/14634980903149902.
  5. E. Baran & B. Ratner (2007). "The Don Sahong Dam and Mekong Fisheries" (PDF). World Fish Center.
  6. J. Sarkkula, M. Keskinen, J. Koponen, M. Kummu, J. E. Richery & O. Varis (2009). "Hydropower in the Mekong Region: What Are the Likely Impacts Upon Fisheries?". in F. Molle, T. Foran & M. Käkönen. Contested Waterscapes in the Mekong Region: Hydropower, Livelihoods and Governance. London: Earthscan. பக். 227–249. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84407-707-1.
  7. நேசனல் சியாகிரபிக் வலைத்தளக் கட்டுரை
  8. J.W. Ferguson, M. Healey, P. Dugan & C. Barlow (2011). "Potential Effects of Dams on Migratory Fish in the Mekong River: Lessons from the Fraser and Columbia Rivers.". Environmental Management 47 (1): 141–159. doi:10.1007/s00267-010-9563-6.
  9. J. Valbo-Jørgensen, D. Coates & K.G. Hortle, (2009). "Fish diversity in the Mekong River Basin.". in I.C. Campbell. The Mekong: Biophysical Environment of an International River Basin.. London: Elsevier Publishers. பக். 161–196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0123740267.

மேலும் படிக்க

  • Kuenzer, C., Campbell, I., Roch, M., Leinenkugel, L., Vo Quoc, T., Dech, S. 2012: "Understanding the Impacts of Hydropower Developments in the context of Upstream-Downstream Relations in the Mekong River Basin". Sustainability Science, Springer, DOI 10.1007/s11625-012-0195-z
  • Kuenzer, C., Guo, H., Leinenkugel, L., Huth, J., Li, X., and Dech, S. 2013: "Flood mapping and flood dynamics of the Mekong Delta: An ENVISAT-ASAR-WSM based Time Series Analysis", Remote Sensing 5 (doi: 10.3390/rs5020687), pp. 687–715
  • Leinenkugel, P., Kuenzer, C., Oppelt, N., Dech, S. 2013: "Characterisation of land surface phenology and land cover based on moderate resolution satellite data in cloud prone areas - a novel product for the Mekong Basin". Remote Sensing of Environment, 136, pp. 180–198. Elsevier. DOI: [10.1016/j.rse.2013.05.004]. ISSN 0034-4257
  • Moder, F.; Kuenzer C.; Xu, Z., Leinenkugel, P.; Bui Van, Q. 2012: "IWRM for the Mekong Basin". In (eds.): Renaud, F. and Kuenzer C. 2012: The Mekong Delta System – Interdisciplinary Analyses of a River Delta. Springer, ISBN 978-94-007-3961-1, DOI 10.1007/978-94-007-3962-8, pp. pp. 133–166
  • Renaud, F., Kuenzer C. 2012: The Mekong Delta System – Interdisciplinary Analyses of a River Delta. Springer, ISBN 978-94-007-3961-1, DOI 10.1007/978-94-007-3962-8, pp. pp. 7–48

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.