ரோகு மீன்

ரோகு (Rohu அல்லது roho labeo (Labeo rohita, இந்தி (ம)நேபாளத்தில்- रोहू मछली, ஒடியா- ରୋହୀ,) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும்.இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 3 அடி நீளம் உடையது. 30 கிலோ எடையளவுக்கு வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

ரோகு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: Actinopterygii
வரிசை: Cypriniformes
குடும்பம்: Cyprinidae
பேரினம்: Labeo
இனம்: L. rohita
இருசொற் பெயரீடு
Labeo rohita
F. Hamilton, 1822

தோற்றம்

இம்மீனின் தலை கடலாவின் தலையைவிட சிறியது.இம்மீனின் கீழ் உதடு சுருக்கங்களுடன் காணப்படும், இம்மீனின் வாய் நேராக திறந்திருக்கும், இதன் செதில்கள் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

உணவுப் பழக்கம்

இது குளத்தின் நடு அல்லது இடைமட்டத்தில் உள்ள, தாவர விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இது ஓர் ஆண்டில்3/4 முதல் 1 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[1]

இனப்பெருக்கக் காலம்

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

உசாத்துணை

காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை

  1. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.