துடுப்பு மீன்

துடுப்பு மீன் (Oarfish) என்பது மிக நீளமான மற்றும் சதைபிடிப்பற்ற பட்டையான, ஒரு கடல் மீனினமாகும்.[1] இவை அனைத்து மிதவெப்ப மண்டல கடல்பகுதிகளிலும் அரிதாகவே காணப்படுகின்றன. இந்த துடுப்பு மீன் குடும்பத்தில் இரண்டு பேரினங்களில் நான்கு இனங்கள் உள்ளன. இவற்றில் ஒன்றான இராட்சத துடுப்பு மீன் உலகின் மிக நீண்ட மீனாக உள்ளது. இந்த மீன் 11 மீட்டர் (36 அடி) வரை வளரக்கூடியது.இவ்வகை மீன்கள் கடலின் ஆழத்தில் தான் பெரும்பாலும் காணப்படும்.

துடுப்பு மீன்
இராட்சத துடுப்பு மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: Lampriformes
குடும்பம்: Regalecidae
பேரினம்

Agrostichthys
Regalecus

ஐக்கிய அமெரிக்க சேவையாளர்கள் சுமந்திருக்கும் 23-அடி (7.0 m) இராட்சத துடுப்பு மீன், இது 1996 செப்டம்பரில் கலிபோர்னியாவின் சான்டியாகோ கடற்கரையில் கரை ஒதுக்கியபோது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2007). "Regalecidae" in FishBase. March 2007 version.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.