எக்காள மீன்

எக்காள மீன் ( cornetfishes அல்லது flutemouths)[2] என்ற மீன்கள் Fistulariidae என்ற சிறிய குடும்பத்தைச் சார்ந்தவை. இவை நீண்டு குழாய் போலக் காணப்படுபவை. இவை ஒற்றைப் பேரினமாகவும், நான்கு இனங்களும் உள்ளடக்கியவை. வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலக் கடல்பகுதியில் உலகம் முழுக்கக் இவை காணப்படுகின்றன.

எக்காள மீன்
புதைப்படிவ காலம்:33–0 Ma
PreЄ
Pg
N

Early Oligocene to Present[1]
Bluespotted cornetfish, Fistularia commersonii
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: Syngnathiformes
குடும்பம்: Fistulariidae
Blainville, 1818
பேரினம்: Fistularia
L., 1758
இனங்கள்

See text.

இவை 200 செ.மீ. (6.6 அடி) நீளம் வரை இருப்பவை. மெல்லியதாகவும், விலாங்குகளைப் போல நீண்ட உடலமைப்பை உடையவை. ஆனால் மிக நீண்ட மூக்குப்பகுதியையும், தனித்துவமான முதுகுப்புற மற்றும் குத துடுப்புகள் உடையவை. மற்றும் வாலடியில் தனித்து தெரியும் சாட்டை போன்ற அமைப்பும், நீள்வட்ட கண்களும் எக்காளத்தின் தனித்துவமான அடையாளம.[3]

இவை பொதுவாக கடலோரமாகவோ அல்லது பவளப் பாறை பகுதிகளில் சிறு மீன்கள், ஓட்டுமீன்கள், மற்றும் பிற முதுகெலும்பில்லாத உயிர்களை உண்டு வாழ்கின்றன.[3]

எக்காள மீன்களை பிடிக்க மீனவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இவற்றை உள்ளூர் மீன் சந்தைகளில் காணலாம்.

இனங்கள்

தற்போது இந்த மீன் இனத்தில் கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இனங்கள்:[4]

  • Fistularia commersonii Rüppell, 1838 (blue-spotted cornetfish)
  • Fistularia corneta C. H. Gilbert & Starks, 1904 (Pacific cornetfish)
  • Fistularia petimba Lacépède, 1803 (red cornetfish)
  • Fistularia tabacaria கரோலஸ் லின்னேயஸ், 1758 (cornetfish)

மேற்கோள்கள்

  1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25.
  2. Fishes of Australia, FISTULARIIDAE Flutemouths (Museum Victoria)
  3. Orr, J.W.; Pietsch, T.W. (1998). Paxton, J.R.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. பக். 170–171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-547665-5.
  4. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Fistularia in FishBase. October 2012 version.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.