சம்பா மசூரி (பி பி டி - 5204)

சம்பா மசூரி (பி பி டி - 5204) (Samba Mashuri (BPT 5204) எனப்படும் இந்த நெல் வகையானது, ஜிஇபி-24 X டி (என்) 1 X மசூரி (GEB-24 x T(N)1 x Mahsuri) போன்ற மூன்று நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். குலைநோய் (Blast) தாக்குதலை எதிர்த்து வளரக்கூடிய இந்நெல் வகை, "வானம் பார்த்த பூமி" எனப்படும் மானாவாரி (Rainfed land) நிலப்பகுகளில் பயிரிட ஏற்றதாக கருதப்படுகிறது. ஒழுங்குப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வர்க்கத்தைச் சார்ந்த இது, தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

சம்பா மசூரி (பி பி டி - 5204)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஜிஇபி-24 X டி (என்) 1 X மசூரி
வகை
புதிய நெல் வகை
காலம்
145 - 150 நாட்கள்
மகசூல்
6000 கிலோ எக்டேர்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காலம்

நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 140 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[2] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், சம்பா, முன்சம்பா, பின்சம்பா, தாளடி, பிசாணம் மற்றும் பின்பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Paddy Varieties of Tamil Nadu - Ruling Varieties - Long Duration - BPT 5204". tnau.ac.in (ஆங்கிலம்) (© 2017 TNAU). பார்த்த நாள் 2017-09-22.
  2. http://www.rkmp.co.in/content/samba-mahsuri-bpt-5204
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.