அம்பை - 10 (நெல்)

அம்பை - 10 (ASD 10) பிரபலமாக கோலவளி (Kolavali) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 10
ASD 10
வேளாண் பெயர்
கோலவளி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
170 - 175 நாட்கள்
மகசூல்
2500 கிலோஎக்டேர்
வெளியீடு
1952
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1952 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 170 -175 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/ பிசாணம், மற்றும் பின் பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 10 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 2500 கிலோவரை ( 2.5 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர் சாகுபடி செய்ய பிசாணப் பருவம் மிகவும் உகந்தது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் குட்டையான தடித்த வடிவில் காணப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-05.
  2. "Rice Knowledge Management Portal ASD 10". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-05.
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-08-05.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.