அம்பை - 16 (நெல்)

அம்பை - 16 (ASD 16) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 31 நெல் இரகத்தையும், கோவை - 39 நெல் இரகத்தையும், (ADT 31 / Co 39) இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 16
ASD 16
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-31 x கோ-39
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
5600 கிலோஎக்டேர்
வெளியீடு
1986
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1986 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]

காலம்

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[4]

சாகுபடி

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 16 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

  • இந்த நெல் இரகம் ஒரு ஏக்கருக்கு 5600 கிலோவரை (5.6 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இவ்வகை நெற்பயிர், அதிக வைக்கோல் தருவதாக உள்ளது.
  • இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் குறுகிய குண்டு வடிவில் காணப்படுகிறது.
  • இந்த நெல்லை சாகுபடி செய்ய, கார், மற்றும் பின் பிசாணம் போன்ற பருவங்கள் மிகவும் உகந்தது.[1][2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-09.
  2. "Rice Knowledge Management Portal ASD 16". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-09.
  3. CROP VARIETIES RELEASED BY THE - TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY FROM 1971 to 2003 - I. AGRICULTURE
  4. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-08-09.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.