அசுவதி பி டீ பீ - 37 (நெல்)

அஸ்வதி பி டீ பீ - 37 (Aswathi (PTB-37) என்பது; 1973 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] சுமார் 117 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டீ - கீ - வூ - ஜென் (Dee-gee-woo-gen) என்ற நெல் இரகத்தையும், பி டீ பீ - 10 (PTB-10) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 5000 கிலோ (50 Q/ha) மகசூல் தரவல்ல இதன் அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டு, மிதமாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் இவ்வகை நெற்பயிர் கேரளம் மாநிலத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.[2]

அசுவதி பி டீ பீ - 37
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டீ - கீ - வூ - ஜென் x பி டீ பீ - 10
(Dee-gee-woo-gen x PTB-10)
வகை
புதிய நெல் வகை
காலம்
120 நாட்கள்
மகசூல்
5000 கிலோ, 1 எக்டேர்
வெளியீடு
1973
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

சான்றுகள்

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties : Page 1 - 10 - Aswathi (PTB-37)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-03-27.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.