கூம்வாளை (நெல்)
கூம்வாளை (Koomvalai) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள, “சுக்கன் கொள்ளை” எனும் நாட்டுப்புறப் பகுதியில் பிரதானமாக விளையக்கூடிய இந்நெல் வகை, ஒரு ஏக்கருக்கு சுமார் 1300 கிலோ நெல் தானியமும், சுமார் 1800 கிலோ வைக்கோலும், மகசூலாக கிடைப்பதாகக் கூறப்படுகிறது.[1]
கூம்வாளை |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
128 - 130 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு சுமார் 1300 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
பருவகாலம்
மத்திய, மற்றும் நீண்டக்கால நெல் வகையைச்சார்ந்த நெற்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்ற பருவகாலமான சம்பா பட்டம் எனும் இப்பருவத்தில், 128 - 130 நாள் வயதுடைய கூம்வாளை நெற்பயிர் பயிரிடப்படுகிறது.[1] மேலும் ஆகத்து, மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்கக்கூடிய சம்பா பட்டத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய ஏற்றப் பருவமாக விளங்குகிறது.[2]
வளருகை
நேரடி நெல் விதைப்பு, மற்றும் நாற்று நடுதல் என இரண்டு முறைகளையும் பின்பற்றி விளைவிக்கப்படும் இந்த நெற்பயிர்கள், 4½ - 5 அடிகள் உயரம் வரை வளரக்கூடியது. மணல் கலந்த மணற்பாங்கு, மற்றும் நீர் சூழ்ந்த நிலப் பகுதிகள் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்ற இரகமாகும்.[1]
குறிப்புகள்
இவற்றையும் காண்க
சான்றுகள்
- "Traditional Varieties grown in Tamil nadu - Kumvalai". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© 2014 TNAU). பார்த்த நாள் 2017-02-17.
- பாரம்பரிய நெல் இரகங்களின் பட்டங்கள்-கோ. நம்மாழ்வார்
- 25. Koomvalai