ஏ டி டீ ஆர் எச் - 1 (நெல்)

ஏ டி டீ ஆர் எச் 1 (ADTRH 1) என்பது; 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வீரிய கலப்பின நெல் வகையாகும். ஐ ஆர் 58025 ஏ (IR 58025 A) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் 66 ஆர் (IR 66 R) என்ற நெல் இரகத்தையும் இயற்கை முறையில் இணைச் சேர்த்து கிடைக்கப்பெறும் நெல் வகையான இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய மத்தியகால நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 7100 கிலோ (71 Q/ha) தானிய மகசூல் தரக்கூடிய இந்நெல் இரகம், தமிழகத்தில் அதிகளவில் வேளாண்மை செய்யப்படுகிறது.[1]

ஏ டி டீ ஆர் எச் - 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-58025-ஏ x ஐஆர்-66-ஆர்
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
7100 கிலோ எக்டேர்
வெளியீடு
1999
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

பருவகாலம்

மத்தியகால நெல் வகைகளை பயிரிட ஏற்ற பருவமான ஆகத்து மாதம் தொடங்கும், சம்பா பட்டத்தில்[2] (பருவத்தில்) பயிரிடப்படும் ஏ டி டீ ஆர் எச் 1, ஒரு வீரியம் மிகுந்த கலப்பின நெல் இரகமாகும்.[3]

சிறப்பம்சங்கள்

நீண்டு வளரும் நடுத்தர குட்டைப்பயிரான இது, உயர் விளைச்சல் தரும் இரகமாகும். பால் போன்ற வெண்மையும், நறுமணம் கொண்ட இந்நெல்லின் அரிசி, நீண்ட சன்னமாக (மெல்லியதாக) காணப்படுகிறது.[4]

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.