காடைச்சம்பா (நெல்)

காடைச்சம்பா (Kadai samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1]

காடைச்சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காடைச்சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், விந்தணு விருத்தியும், அதீத உடற்பலமும் பெருகுவதோடு, பிரமேக சுரமும், (பிரமேக சுரம் என்பது, எக்காலமும் மாதரின் புணர்ச்சி மோகத்துடன்கூடிய பசியின்மை.) மேலும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மருத்துவக்குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது[2]

அகத்தியர் குணபாடம்

காடைச்சம் பாவரிசி கண்டுதரி சித்தவர்க்கு
நீடுற்ற மேகமனல் நிற்குமோ ! – காடைப்
பறவைபோல் நோயும் பறக்கும் பலத்தின்
உறவையெவர் சொல்வார் உரை.

  • பொருள்: இதனால் மேக அனல் சில நோய்கள் நீங்கும். உடற்குவன்மை தரும்.[3]

இவற்றையும் காண்க

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.