பி ஆர் - 106 (நெல்)

பி ஆர் - 106 (PR-106) எனப்படும் இது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 138 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் - 8 (IR-8), பேடா 5 (Peta 5), மற்றும் பெல்லா பாட்னா (Bella Patna) என 3 நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். நடுத்தர நீர்ப்பாசனம் உள்ள நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீளமான சன்னமும், வெண்ணிறமாகவும் காணப்படுகிறது. புகையான் (brown planthopper (BPH), மற்றும் ஆனைக்கொம்பன் ஈ(gall midge (GM) பொன்றவைகளால் எளிதில் தாக்கக்கூடிய இந்த நெற்பயிர், இந்தியப் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

வெளியிணைப்புகள்

சான்றுகள்

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties: Page 1 - 41. PR-106". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-04-12.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.