ஜி ஆர் - 11 (நெல்)

ஜி ஆர் - 11 (GR-11) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால நெல் வகையாகும்.[1] ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 125 - 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஜின்னியா 31 (Zinnia 31) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 - 216 (IR 8-216) எனும் நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, நடுத்தர நீர்ப்பாசன முறைக்கு ஏற்றதாகும். 112 செ. மீ, அரை குள்ள தானியத்தை கொண்டுள்ள இந்நெல் இரகம், மேற்கிந்திய பகுதியான குசராத்து மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

ஜி ஆர் - 11
GR-11
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஜின்னியா 31 x ஐஆர் 8 - 216
வகை
புதிய நெல் வகை
காலம்
125 - 130
வெளியீடு
1978
மாநிலம்
குசராத்து
நாடு
 இந்தியா

சான்றுகள்

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties : Page: 2". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-07-14.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.