கார் (நெல்)

கார் நெல் (Kar) புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமான இது, பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றாகும். அதிக மழை நீர் தேங்கும் பள்ளமான நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய ஒரே இரகமாக உள்ள இந்த கார் நெல், பாரம்பரிய நெல்லில் நடுத்தர இரகமாகவும் மத்திய கால பயிராகவும் விளங்குகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தது இருபத்தி நான்கு மூட்டைவரை மகசூல் கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இதற்குத் தேவையின்றி, இயற்கையில் கிடைக்கும் சத்துகளைக் கிரகித்துக்கொண்டு செழித்து வளரக்கூடியது.[1] மேலும், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகக்கூடிய இந்த இரகம். சிவப்பு நிற நெல்லும், வெள்ளை அரிசியும் உடையது, நடவு செய்ய மட்டுமே ஏற்ற இரகமாக உள்ள இது, பயிர் வளர்ந்து பச்சை பிடித்துவிட்டால் அதன்பிறகு பதினைந்து நாட்களில் நீர் நிரம்பினாலும் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் இந்த நெல் இரகம் தண்ணீருக்கு உள்ளேயே பூத்து, பால் பிடித்து, கதிர் முற்றி முழு வளர்ச்சி அடைந்து விளையக்கூடியது. இதன் வைக்கோல் அடர்த்தியாகவும் கம்பீரமாகவும் இருப்பதால் தண்ணீரில் வாரக் கணக்கில் இருந்தாலும் அழுகுவதில்லை.[2]

கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

அகத்தியர் குணபாடம்

காரரிசி மந்தங் கனப்புடலில் தூலிப்பும்
பாரறிய வாயுவையும் பண்ணுங்காண் – நேரே
கரப்பானென் பார்பொருந்திற் காயமது மெத்த
உரப்பாகும் என்றே யுரை.

மேற்கூறிய பாடலின் பொருளானது, மந்த குணமுள்ள காரரிசி, உடல் பெருக்கையும், வளிக்குற்றத்தையும் வன்மையையும் தருவதாகவும், இதனால் கரப்பான் நோய்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.[3]

இவற்றையும் காண்க

சான்றுகள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.