ஐ ஆர் 8 (நெல்)

ஐ ஆர் 8 (IR-8) எனப்படும் இது; 1969 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, இறவை, மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 - 140 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டீ - கீ - வூ - ஜென் (Dee-gee-woo-gen) என்ற நெல் இரகத்தையும், பேடா(Peta) எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு 5000 - 6500 கிலோ (50-55 Q/ha) மகசூல் தரவல்ல இதன் நெற்பயிர், சுமார் 80 - 85 (குள்ளம்) சென்டிமீட்டர் (82 cm) உயரம் வளரக்கூடியது. மேலும், நீண்டு தடித்து காணப்படும் இவ்வகை (குண்டு) நெல், வெண்ணிறத்தில் உள்ளது.[2]

ஐ ஆர் 8
IR-8
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டீ-கீ-வூ-ஜென் x பேடா
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 140 நாட்கள்
மகசூல்
5000 கிலோ எக்டேர்
வெளியீடு
1969
நாடு
 இந்தியா

குறிப்புகள்

ஐ ஆர் 8 (IR-8) இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் நெல் வகையாகும்.[3] மேலும், இந்த நெல் வகை, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், பஞ்சாப், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கூறப்படுகிறது.[2]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.