ஐ இ டி - 849 (சி - 8585) (நெல்)


ஐ இ டி - 849 (சி - 8585) (IET-849 (C-8585) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகியகால நெல் வகையாகும். சூன் - சூலை மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 108 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1]

ஐஇடி-849 (சி - 8585)
IET-849 (C-8585)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டி (என்) 1 x கோ-29
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
2400 கிலோ எக்டேர்
வெளியீடு
1978
நாடு
 இந்தியா

டி (என்) 1 (T(N)1) எனும் நெல் இரகத்தையும், கோ - 29 (Co 29) எனும் நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை,[2] மேனிலம், தாராய் வண்டல் மண், மற்றும் செந்நிற களிமண் போன்ற நிலப்பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. குறுகிய தானியமணிகளை கொண்டுள்ள இந்நெல் இரகம், வடஇந்தியப் பகுதியான மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3][4]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.