கோவை - 43 (நெல்)

கோ - 43 (நெல்) (CO 43) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நெல் இனப் பெருக்க நிலையம் மூலம் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இரகம், தசல் மற்றும் ஐ ஆர் - 20 (Dasal x IR 20) போன்ற நெல் இராகங்களிலிருந்து இணைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. இதன் சாகுபடி காலம் 135 நாட்கள் ஆகும். தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களிலும் இந்த நெல் ரகம் வளரும்.[2]

கோ - 43
CO 43

கோ 43 நெற்பயிர்
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
தசல் x ஐ ஆர் - 20
(Dasal x IR 20)
காலம்
130 – 135 நாட்கள்
மகசூல்
5200 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1982, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

சிறப்பம்சங்கள்

இந்த நெல் இரகம் சன்ன ரக அரிசியாக இருக்கும். களர் மற்றும் உவர் நிலங்களில் வளரக்கூடியது. வளர்ந்து சாயாதது. எக்டேருக்கு 5.3 டன்கள் விளைச்சல் தர வல்லது.[3] தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கோ 43 பயிரிடப்படுகிறது .

இவற்றையும் காண்க


மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.