அம்பை - 13 (நெல்)

அம்பை - 13 (ASD 13) பிரபலமாக அரிக்கிரவை (Arikiravai) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

அம்பை - 13
ASD 13
வேளாண் பெயர்
அரிக்கிரவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
170 - 175 நாட்கள்
மகசூல்
4000 கிலோஎக்டேர்
வெளியீடு
1965
வெளியீட்டு நிறுவனம்
TNAU, அம்பாசமுத்திரம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழக நெல்லை மாவட்டத்தின், அம்பையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (Rice Research Station, Ambasamudram),[2] 1965 ஆம் ஆண்டு, இவ்வகை நெல்லை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

நீண்டக்கால நெற்பயிர்களில் ஒன்றான இது, 170 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம். போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]

சாகுபடி

நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 13 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

சிறப்புப் பண்புகள்

  • இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4000 கிலோவரை (4.0 t/ha) மகசூல் தரக்கூடியது.
  • இதன் நெற்பயிர், பிசாணப் பருவத்தில் அதிக விளைச்சல் தரக்கூடியது.
  • இந்நேல்லின் அரிசி, சிவப்பு நிறத்தில் பெரிய தடித்த வடிவில் உள்ளது.
  • அம்பை - 13 இன் அரிசி மாவு, இட்லிக்கு மிகவும் ஏற்றதாகும்.[1][2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-08.
  2. "Rice Knowledge Management Portal ASD 13". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-08.
  3. "Paddy Varieties of Tamil Nadu". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU 2017). பார்த்த நாள் 2017-08-08.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.