டி - 23 (நெல்)

டி - 23 (T-23) என்பது; 1975 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வகையாகும்.[1] 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், “கலா சுகதாஸ்”[2] எனும் நெல் வகையிலிருந்து தெரிவு செய்யப்பட்டதாகும். நீர்ப்பாசன வசதியுடனான மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெற்பயிர், உயரமாகவும், இதன் நெல் தானியங்கள் பெரிய அளவிலும், மற்றும் நறுமணமும் உடையதாக உள்ளது. ஒரு எக்டேருக்கு சுமார் 3000 - 3500 கிலோ (30-35 Q/ha) மகசூல் தரவல்ல இது, உத்தரப் பிரதேசம், மற்றும் இமாச்சலப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[3]

சான்றுகள்

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. Non-Basmati aromatic :
  3. "Details of Rice Varieties : Page 1 - 23 - T-23". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-04-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.