நேபாளத்தில் பௌத்தம்
கௌதம புத்தர் பிறந்த லும்பினித் தோட்டம் நேபாளத்தில், ரூபந்தேகி மாவட்டத்தில் உள்ள பண்டைய கபிலவஸ்து நகரத்தின் அன்மையில் உள்ளது. இளவரசர் சித்தார்த்தர் (புத்தரின் பிறப்பு பெயர்) பிறந்த ஆண்டு நிச்சயம் உறுதி செய்ய முடியாது, இது வழக்கமாக கி.மு. 623 என்று கூறப்படுகிறது.[1][2]
திபெத்திய-பர்மிய மொழி பேசும் இனங்களை முக்கியமாகக் கொண்டிருக்கும் நேபாள மக்களின் மக்கள் தொகையில் 10.74% பேர் பௌத்தம் பயில்கின்றனர். நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் உள்ள மக்கள் இந்துத்துவம், பெளத்த மதங்களைப் பின்பற்றிக் கொள்கின்றனர். பல சமயங்களில் தெய்வங்கள் மற்றும் கோயில்களோடு இம்மதம் இணைந்து கொள்கிறது. உதாரணமாக, முக்திநாத், பௌத்தநாத்து கோவில் புனிதமானது மற்றும் பொதுவானது.[3]
நேபாளத்தின் முக்கிய பௌத்தப் பிரிவுகள் திபெத்திய பௌத்தம் மற்றும் போன் பௌத்தம் ஆகும்.
நேபாளத்தின் இரண்டாவது பெரிய சமயம் பௌத்தம் ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 26 மில்லியன் மக்களில், பௌத்த சமயத்தவர்களின் மக்கள் தொகை 9% ஆகும்.
மேலோட்டப் பார்வை


நேபாள கலாச்சாரத்தின் பெரும்பகுதிகளில் பெளத்த தாக்கங்கள் பெரிதும் பரவி வருகின்றன. பௌத்த மற்றும் ஹிந்து கோயில்களும் இருவரின் விசுவாசத்திற்காக வணக்க வழிபாட்டு இடங்களை பகிர்ந்து கொள்கின்றனர். நேபாளத்தில் இந்துத்துவம் மற்றும் புத்தமதத்திற்கு இடையில் உள்ள வேறுபாடு எப்போதும் தெளிவாக இல்லை. அம்சுவர்மன் ஆட்சி காலத்தில், நேபாள இளவரசி பிருகுதி என்பவள் திபெத்தில் பெளத்த மதம் பரவுவதற்கு பெரும் பங்காற்றினாள். மஹாயான பௌத்தத்தில் உள்ள புனிதமான பௌத்த புத்த நூல்கள் முக்கியமாக ரஞ்சனா எழுத்துக்கள், நெவர்ஸின் ஸ்கிரிப்ட் அல்லது லஞ்சா போன்ற ஸ்கிரிப்டில் எழுதப்பட்டன, இவை ரஞ்சனாவில் இருந்து பெறப்பட்டவை.[4]
நேபாளாத்தில் பௌத்த மக்கள்தொகை
2001ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தில் இனவாரியாக பௌத்த மக்கள்தொகை விவரம்:
இனக்குழுக்கள் | மொத்த மக்கட்தொகை | பௌத்தர்கள் | % |
---|---|---|---|
தமாங் | 1,282,304 | 1,257,461 | 98.06 |
மகர் | 1,887,733 | 1,268,000 | 60 |
குரூங் | 3,500,000 | 3,000,000 | 95.9 |
நேவார் | 1,242,232 | 190,629 | 15.3 |
செர்ப்பா | 150,000 | 130,000 | 92.8 |
தகளி | 50,000 | 35,000 | 65 |
சந்தியால்l | 30,000 | 18,000 | 64.2 |
ஜிரெல் | 20,500 | 19,600 | 87 |
லெப்சா | 60,000 | 50,800 | 88.8 |
அயோல்மோ | 198,000 | 195,400 | 98.4 |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Smith, Vincent A. (1914). The Early History of India from 600 B.C. to the Muhammadan Conquest Including the Invasion of Alexander the Great (3rd ). London: Oxford University Press. பக். 168–169. https://books.google.com/books?id=b9a1AAAAIAAJ&pg=PA168-IA1&dq=birth+place+buddha&hl=en&ei=cyqWT9juLsnZiQL0m8yFCg&sa=X&oi=book_result&ct=book-thumbnail&resnum=9&ved=0CGQQ6wEwCA#v=onepage&q=birth%20place%20buddha&f=false.
- UNESCO (2012). "Lumbini, the Birthplace of the Lord Buddha". UNESCO: World Heritage Centre.
- Shastri, G. C (July 1968). "Hinduism and Buddhism in Nepal". Ancient Nepal: Journal of the Department of Archaeology 4: 48–51. Archived from the original on July 6, 2012. https://web.archive.org/web/20120706192604/http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/ancientnepal/pdf/ancient_nepal_04_full.pdf.
- Murthy, K. Krishna (1989). "Advent of Buddhism". Buddhism in Tibet. Delhi, India: Sundeep Prakashan. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85067-16-3.