ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.

கொடி
குறிக்கோள்: In varietate concordia  (இலத்தீன்)
"United in diversity"[1]
நாட்டுப்பண்: ஐரோப்பிய வணக்கம்  (orchestral)
அரசியல் மையங்கள்பிரஸ்ஸல்ஸ்
ஸ்திராஸ்பூர்க்
லக்சம்பேர்க்
ஆட்சி மொழிகள்
மக்கள் ஐரோப்பியர்
உறுப்பு நாடுகள்
அரசாங்கம் Sui generis
   ஆணையம் José Manuel Barroso
   பாராளுமன்றம் Hans-Gert Pöttering
   Council சுலோவீனியா
   European Council Janez Janša
அமைப்பு
   1951 பரிஸ் ஒப்பந்தம் ஏப்ரல் 18 1951 
   1957 உரோம் ஒப்பந்தம் மார்ச் 25 1957 
   1992 மாசுடிரிச் ஒப்பநதம் பெப்ரவரி 7 1992 
பரப்பு
   மொத்தம் 43,81,376 கிமீ2 (7வது¹)
16,69,807 சதுர மைல்
   நீர் (%) 3.08
மக்கள் தொகை
   2008 கணக்கெடுப்பு 497,198,740 (3வது¹)
   அடர்த்தி 114/km2 (69வது¹)
289/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 (IMF) கணக்கெடுப்பு
   மொத்தம் $14,953 டிரில்லியன் (1வது¹)
   தலைவிகிதம் $28,213 (14வது¹)
மொ.உ.உ (பெயரளவு) 2007 (IMF) கணக்கெடுப்பு
   மொத்தம் $16,574 டிரில்லியன் (1வது¹)
   தலைவிகிதம் $33,482 (13வது¹)
நாணயம்
நேர வலயம் (ஒ.அ.நே+0 to +2)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே+1 to +3)
இணையக் குறி .eu

ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.

1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.

2012ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது.[3]

வரலாறு

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.

1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.

1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.

போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.

1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.

2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

புவியியல்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 4,423,147 சதுர கிலோமீட்டர்கள் (1,707,787 sq mi) பரப்பளவை கொண்டன.[lower-alpha 1] ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய மலைச் சிகரம் அல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மோண்ட் பிளாங்க் ஆகும். 4,810.45 மீட்டர்கள் (15,782 ft) கடல்மட்டத்திற்கு மேல்.[4]

உறுப்பு நாடுகள்

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது.[5] இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. 28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ. ஆகும்.

மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.

பின்லாந்துசுவீடன்எசுத்தோனியாலாத்வியாலிதுவேனியாபோலந்துசிலோவாக்கியாஅங்கேரிஉருமேனியாபல்காரியாகிரேக்கம் (நாடு)சைப்பிரசுசெக் குடியரசுஆஸ்திரியாசுலோவீனியாஇத்தாலிமால்ட்டாபோர்த்துகல்எசுப்பானியாபிரான்சுஜெர்மனிலக்சம்பர்க்பெல்ஜியம்நெதர்லாந்துஐக்கிய இராச்சியம்அயர்லாந்து
Name Capital Accession Population
(2016)[6]
Area (km2) Population density
(per km²)
 ஆஸ்திரியா வியன்னா 199501011 சனவரி 1995 87,00,471 83,855 103.76
 பெல்ஜியம் பிரசெல்சு 19570325Founder 1,12,89,853 30,528 369.82
 பல்கேரியா சோஃவியா 200701011 சனவரி 2007 71,53,784 1,10,994 64.45
 குரோவாசியா சாகிரேப் 201307011 சூலை 2013 41,90,669 56,594 74.05
 சைப்பிரசு நிக்கோசியா 200405011 மே 2004 8,48,319 9,251 91.7
 செக் குடியரசு பிராகா 200405011 மே 2004 1,05,53,843 78,866 133.82
 டென்மார்க் கோபனாவன் 197301011 சனவரி 1973 57,07,251 43,075 132.5
 எசுத்தோனியா தாலின் 200405011 மே 2004 13,15,944 45,227 29.1
 பின்லாந்து எல்சிங்கி 199501011 சனவரி 1995 54,87,308 3,38,424 16.21
 பிரான்சு பாரிஸ் 19570325Founder 6,66,61,621 6,40,679 104.05
 செருமனி பெர்லின் 19570325Founder[lower-alpha 2] 8,21,62,000 3,57,021 230.13
 கிரேக்க நாடு ஏதென்ஸ் 198101011 சனவரி 1981 1,07,93,526 1,31,990 81.78
 அங்கேரி புடாபெஸ்ட் 200401011 மே 2004 98,30,485 93,030 105.67
 அயர்லாந்து டப்லின் 197301011 சனவரி 1973 46,58,530 70,273 66.29
 இத்தாலி உரோம் 19570325Founder 6,06,65,551 3,01,338 201.32
 லாத்வியா ரீகா 200405011 மே 2004 19,68,957 64,589 30.48
 லித்துவேனியா வில்னியஸ் 200405011 மே 2004 28,88,558 65,200 44.3
 லக்சம்பர்க் லக்சம்பர்க் (நகரம்) 19570325Founder 5,76,249 2,586 222.83
 மால்ட்டா வல்லெட்டா 200405011 மே 2004 4,34,403 316 1,374.69
 நெதர்லாந்து ஆம்ஸ்டர்டம் 19570325Founder 1,69,79,120 41,543 408.71
 போலந்து வார்சாவா 200405011 மே 2004 3,79,67,209 3,12,685 121.42
 போர்த்துகல் லிஸ்பன் 198601011 சனவரி 1986 1,03,41,330 92,390 111.93
 உருமேனியா புக்கரெஸ்ட் 200701011 சனவரி 2007 1,97,59,968 2,38,391 82.89
 சிலவாக்கியா பிராத்திஸ்லாவா 200405011 மே 2004 54,26,252 49,035 110.66
 சுலோவீனியா லியுப்லியானா 200405011 மே 2004 20,64,188 20,273 101.82
 எசுப்பானியா மத்ரித் 198601011 சனவரி 1986 4,64,38,422 5,04,030 92.13
 சுவீடன் ஸ்டாக்ஹோம் 199501011 சனவரி 1995 98,51,017 4,49,964 21.89
 ஐக்கிய இராச்சியம் இலண்டன் 197301011 சனவரி 1973 6,53,41,183 2,43,610 268.22
Totals: 28 countries 510,056,011 4,475,757 113.96

மொழிகள்

மொழி தாய்மொழியாக கொண்டவர்கள் மொத்தம்
ஆங்கில மொழி 13% 51%
செருமன் மொழி 16% 27%
பிரென்ச்சு 12% 24%
இடாலியன் 13% 16%
ஸ்பானியம் 8% 15%
போலிஷ் 8% 9%
ரோமானியன் 5% 5%
டச்சு 4% 5%
கங்கேரியன் 3% 3%
போர்த்துக்கீச மொழி 2% 3%
செக் 2% 3%
ஸ்வீடிஷ் 2% 3%
கிரேக்க மொழி 2% 3%
பல்கேரியன் 2% 2%
சுலோவாக் 1% 2%
டானிஷ் 1% 1%
பின்னிஷ் 1% 1%
லிதுஆனியன் 1% 1%
கிரோவாசியன் 1% 1%
சுலோவேனியன் <1% <1%
எஸ்டோனியன் <1% <1%
ஐரிஷ் <1% <1%
லற்வியன் <1% <1%
மால்த்தியம் <1% <1%

Published in June 2012.[7]
Survey conducted in February – March 2012.
Native: Native language[8]
Total: EU citizens able to hold a
conversation in this language[9]

ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: பல்கேரிய மொழி, குரோவாசிய மொழி, செக் மொழி, டேனிய மொழி, டச்சு மொழி, ஆங்கிலம், எசுத்தோனிய மொழி, பின்னிய மொழி, பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம் (மொழி), அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, ஐரிய மொழி, இலத்துவிய மொழி, இலித்துவானிய மொழி, மால்திய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, சுலோவாக்கிய மொழி, சுலோவேனிய மொழி, எசுப்பானியம், மற்றும் சுவீடிய மொழி.[10][11] முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும்.[12] இடாய்ச்சு மொழி அதிகமாகவும் பரவலாகவும் தாய்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7 மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.[13]யுராலிய மொழிக்குடும்பத்தை சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தன. சிரில்லிக் எழுத்துக்கள் இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.[14]

சனத்தொகை

Member StatePopulation
in millions
Population
% of EU
Area
km2
Area
% of EU
Pop. density
People/km2
 ஐரோப்பிய ஒன்றியம் 494.8 100% 4,422,773 100% 112
 ஆஸ்திரியா 8.3 1.7% 83,858 1.9% 99
 பெல்ஜியம் 10.5 2.1% 30,510 0.7% 344
 பல்கேரியா 7.7 1.6% 110,912 2.5% 70
 குரோவாசியா 4.3 0.9% 56,594 1.3% 75.8
 சைப்பிரசு 0.8 0.2% 9,250 0.2% 84
 செக் குடியரசு 10.3 2.1% 78,866 1.8% 131
 டென்மார்க் 5.4 1.1% 43,094 1.0% 126
 எசுத்தோனியா 1.4 0.3% 45,226 1.0% 29
 பின்லாந்து 5.3 1.1% 337,030 7.6% 16
 பிரான்சு[15] 65.03 13.% 643,548 14.6% 111
 செருமனி 80.4 16.6% 357,021 8.1% 225
 கிரேக்க நாடு 11.1 2.2% 131,940 3.0% 84
 அங்கேரி 10.1 2.0% 93,030 2.1% 108
 அயர்லாந்து 4.2 0.8% 70,280 1.6% 60
 இத்தாலி 58.8 11.9% 301,320 6.8% 195
 லாத்வியா 2.3 0.5% 64,589 1.5% 35
 லித்துவேனியா 3.4 0.7% 65,200 1.5% 52
 லக்சம்பர்க் 0.5 0.1% 2,586 0.1% 181
 மால்ட்டா 0.4 0.1% 316 0.0% 1,261
 நெதர்லாந்து 16.4 3.3% 41,526 0.9% 394
 போலந்து 38.1 7.7% 312,685 7.1% 122
 போர்த்துகல் 10.6 2.1% 92,931 2.1% 114
 உருமேனியா 21.6 4.4% 238,391 5.4% 91
 எசுப்பானியா 44.7 9.0% 504,782 11.4% 87
 சிலவாக்கியா 5.4 1.1% 48,845 1.1% 111
 சுலோவீனியா 2.0 0.4% 20,253 0.5% 99
 சுவீடன் 9.1 1.8% 449,964 10.2% 20
 ஐக்கிய இராச்சியம் 60.7 12.3% 244,820 5.5% 246

ஐக்கிய இராச்சியம் வெளியேறல்

ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடித்து இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து, சூன் 2016-இல் நடந்த பொதுசன வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளிவேற வேண்டும் என விரும்பி பெரும்பாலன மக்கள் வாக்களித்தனர்.[16][17]ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்பாத ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலக முன்வந்துள்ளார்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Symbols of the EU". Europa (web portal). பார்த்த நாள் 2008-01-09.
  2. "அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு". அக்டோபர் 12, 2012. தினமலர். பார்த்த நாள் அக்டோபர் 12, 2012.
  3. குரோவாசியா 28-வது உறுப்பு நாடாக சேர்க்கப்பட்டது
  4. "Mont Blanc shrinks by 45 cm (17.72 in) in two years". Sydney Morning Herald. 6 November 2009. http://www.smh.com.au/environment/mont-blanc-shrinks-by-45cm-in-two-years-20091106-i0kk.html. பார்த்த நாள்: 26 November 2010.
  5. "European Countries". Europa web portal. பார்த்த நாள் 18 September 2010.
  6. "Europeans and Their Languages, 2012 Report" (PDF). பார்த்த நாள் 3 June 2013.
  7. European Commission (2012). "Europeans and their Languages". Special Eurobarometer 386 54–59. europa.eu. பார்த்த நாள் 16 December 2012.
  8. European Commission (2012). "Europeans and their Languages". Special Eurobarometer 386 78–83. europa.eu. பார்த்த நாள் 16 December 2012.
  9. EUR-Lex (12 December 2006). "Council Regulation (EC) No 1791/2006 of 20 November 2006". Official Journal of the European Union. Europa web portal. பார்த்த நாள் 2 February 2007.
  10. "Languages in Europe – Official EU Languages". EUROPA web portal. பார்த்த நாள் 12 October 2009.
  11. European Commission (2006). "Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)" (PDF). Europa web portal. பார்த்த நாள் 11 March 2011. "English is the most commonly known language in the EU with over a half of the respondents (51%) speaking it either as their mother tongue or as a foreign language."
  12. European Commission (2006). "Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)" (PDF). Europa web portal. பார்த்த நாள் 11 March 2011. "56% of citizens in the EU Member States are able to hold a conversation in one language apart from their mother tongue."
  13. European Commission (2004). "Many tongues, one family. Languages in the European Union" (PDF). Europa web portal. பார்த்த நாள் 3 February 2007.
  14. Figures for France include the four overseas departments (பிரெஞ்சு கயானா, Guadeloupe, மர்தினிக்கு, Réunion) which are integral parts of the European Union, but do not include the overseas collectivities and territories, which are not part of the European Union. Figures for Metropolitan France proper are: population 63.6 million, area 551 695 km², and population density 113/km².
  15. வாக்களிப்பு முடிவும் அது குறித்த கருத்துகளும்
  16. பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...?

வெளி இணைப்புக்கள்

  1. On 3 அக்டோபர் 1990, the constituent states of the former German Democratic Republic acceded to the Federal Republic of Germany, automatically becoming part of the EU.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.