டேனிய மொழி

டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிகளின் துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது[1]. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், ஆர்ஜெண்டீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.

டேனிய மொழி
Default
  • ஜெர்மானியம்
    • வட ஜெர்மானியம்
      • கிழக்கு ஸ்கன்டினேவியம்
        • டேனிய மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1da
ISO 639-2dan
ISO 639-3dan

மேலும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.