துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு

துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisian National Dialogue Quartet) என்பது துனீசியாவில் 2011 துனீசியப் புரட்சியை அடுத்து அங்கு பன்முக மக்களாட்சியைக் கட்டியெழுப்ப பெரும் பங்களிப்புச் செய்த ஒரு கூட்டமைப்பாகும். இவ்வமைப்பிற்கு 2015 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2]

இந்நாற்கூட்டமைப்பில் உள்ள அமைப்புகள்:[3]

  • துனீசிய பொதுத் தொழிலாளர் ஒன்றியம்
  • தொழிற்துறை, வணிகம், கைவினைப் பொருட்களின் துனீசியக் கூட்டமைப்பு
  • துனீசிய மனித உரிமைகள் முன்னணி
  • துனீசிய வழக்கறிஞர்களின் ஆணையம்

மேற்கோள்கள்

  1. http://nobelpeaceprize.org/en_GB/laureates/laureates-2015/announce-2015/
  2. "The Nobel Peace Prize 2015". Nobelprize.org. Nobel Media AB 2014. Web. 9 Oct 2015.
  3. "The Nobel Peace Prize 2015 - Press Release". Nobelprize.org (9 October 2015).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.