சீரீன் இபாதி

சீரீன் இபாதி (பாரசீக மொழி:عبادی;ஆங்கிலம்:Shirin Ebadi;பிறப்பு: ஜூன் 21, 1947) ஈரானிய ஈரானிய வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி மற்றும் மனித உரிமை போராளியாவார். மேலும் , இவர் ஈரானில் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மையத்தை(Defenders of Human Rights Center) நிறுவி செயற்பட்டார். 2003 ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியது. இப் பரிசைப் பெறும் முதலாவது ஈரானிய இவர்.2009 ஆம் ஆண்டில் ஈரானிய அதிகாரிகளால் இவ்விருது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஈரானிய அரசாங்கம் மறுத்துள்ளது . [3] 2004 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் , "உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.[4] "அனைத்து காலத்திலும் மிகவும் செல்வாக்குள்ள 100 பெண்கள்." பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் .[5]

சீரீன் இபாதி
Shirin Ebadi
شيرين عبادى
துனீசியாவில் சீரீன் இபாதி (18 நவம்பர் 2005)
பிறப்பு21 சூன் 1947 (1947-06-21)[1]
அமதான், ஈரான்
இருப்பிடம்இலண்டன், இங்கிலாந்து
தேசியம்இரானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தெகரான் பல்கலைக்கழகம்[2]
பணிவழக்கறிஞர், நீதிபதி
அறியப்படுவதுமனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு
சமயம்சியா இசுலாம்
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (2003)

ஒரு வழக்குரைஞராக, பேராசிரியராக, எழுத்தராக, போராளியாக, உறுதியுடன், இரானிலும் வெளியிலும் மிகத்தெளிவாக அவர் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் துணிவுடனும், முழு மனதோடும், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமலும் நிலைத்து நின்று போராடியிருக்கின்றார்.

அவருடைய போராட்டக்களம் மனித உரிமை, எந்த சமூகமும் நாகரிகமானது அல்ல அது அதனுடைய குழந்தைகளையும் பெண்களையும் மதிக்காதபோது என்ற அடிப்படையில் காணப்பட்டது. வன்முறை மிகுந்த ஒரு சமூகத்தில், அவர் வன்முறையற்ற போராட்டத்தை வலியுறுத்தியிருக்கின்றார். ஒரு சமூகத்தின் கோலாட்சி தேர்தல் மூலமாகவே அமைக்கப்படவேண்டுமென்பது அவருடைய அடிப்படையான கருத்து. சமூகக்குழப்பங்களை விழிப்புணர்வு, பேச்சு வார்த்தை இவற்றின் அடிப்படையில் தீர்வு காணவேண்டுமென்பதை இவர் ஆதரிக்கின்றார்.

எபாடி ஒரு விழிப்புணர்வு பெற்ற முசுலிம். இவர் இசுலாமிற்கும் மனித உரிமைக்கும் எந்த ஒரு முரண்பாட்டையும் காணவில்லை. நோர்வே நோபெல் குழு ஒரு பெண் அதுவும் ஒரு முசுலிம் உலகத்துப்பெண்ணை அங்கீகரிப்பதில் மகிழ்வுறுகின்றது. அவரால் இந்த உலகம் மனித உரிமைக்காக எங்கெங்கெல்லாமிருந்து போராடுகின்றனரோ அவரோடு இயைந்து பெருமையடையும்.

கடந்த பத்தாண்டுகளாக, குடியாட்சியும் மனித உரிமையும் பல நாடுகளிலும் முன்னேறியுள்ளது. இந்த விருதால் நோபெல் குழு இந்த முன்னேற்றத்தை முடுக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த விருதால் இரானிய மக்கள் தங்களின் குடிமகன் முதன்முறையாக இவ்விருதைப்பெறுவதற்காக மிகவும் பெருமைப்படுவர் என நம்புகின்றோம். இவ்விருது மனித உரிமைக்காகவும், குடியாட்சிக்காகவும்,இரான் நாட்டிலும், முசுலிம் உலகிலும், பிற நாடுகளிலும் போராடுபவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் தெம்பையும் தரும் என்பதில் ஐயமில்லை.

மேற்கோள்

  1. Daniel P. O'Neil (2007). Fatima's sword: Everyday female resistance in post-revolutionary Iran. ProQuest. பக். 55–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-549-40947-2. http://books.google.com/books?id=e6OACOoqokEC&pg=PA55. பார்த்த நாள்: 15 சனவரி 2012.
  2. Karen L. Kinnear (22 சூலை 2011). Women in Developing Countries: A Reference Handbook. ABC-CLIO. பக். 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-425-2. http://books.google.com/books?id=oIjxVimxO_wC&pg=PA152. பார்த்த நாள்: 15 January 2012.
  3. Reuters (27 November 2009). "Iran Denies It Confiscated Ebadi's Nobel Medal". The New York Times. http://www.nytimes.com/reuters/2009/11/27/world/international-uk-norway-iran-nobel.html. பார்த்த நாள்: 15 நவம்பர் 2013.
  4. Forbes.com: Forbes 100 Most Powerful Women in the World 2004
  5. Britannica Educational Publishing (1 October 2009). The 100 Most Influential Women of All Time. The Rosen Publishing Group. பக். 330–331. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61530-058-7. http://books.google.com/books?id=3gVvaAUcnq0C&pg=PA330. பார்த்த நாள்: 15 நவம்பர் 2013.

வெளி இணைப்புகள்

www.nobel.se

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.