பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்

பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் (Frederik Willem de Klerk 18 மார்ச்சு 1936) என்பவர் தென்னாப்பிரிக்க அரசியல்வாதி, நிறவெறி ஆட்சிக்காலத்தில் கடைசி அரசுத் தலைவராக இருந்தவர். இவர் 1989 முதல் 1994 வரை அரசின் தலைவராக இருந்தார். நிறவெறி இனஒதுக்கல் கொள்கையால் நடந்து வந்த ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வந்ததில் பங்களித்தார். டி கிளர்க் தென்னாப்பிரிக்காவின் தேசியக்கட்சியின் தலைவராக 1989 முதல் 1997 வரை பதவி வகித்தார்.

பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்

அப்பர்தாய்ட் என்ற நிறவெறி இனஒதுக்கல் ஆதிக்க முறையை மாற்றி இன வேறுபாடு அற்ற சனநாயக ஆட்சி நடைமுறைக்கு வருவதற்கு நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து செயல்பட்டார்.[1]

வாழ்க்கைக் குறிப்புகள்

பணிகள்

சான்றாவணம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.