இரிகொபெர்த்தா மெஞ்சூ

இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் (Rigoberta Menchú Tum, எசுப்பானியம்: [riɣoˈβerta menˈtʃu]; பிறப்பு: சனவரி 9, 1959)[1] குவாத்தமாலா நாட்டின் கீசெ இனப் பெண்மணி ஆவார். மெஞ்சூ தமது வாழ்நாளை குவாத்தமாலாவின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்தவர். 1960 முதல் 1996 வரை நடந்த குவாத்தமாலா உள்நாட்டுப் போரின் போதும் பிறகும் இந்த உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றார். 1992ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது[2]. 1998ஆம் ஆண்டில் ஆதுரியா இளவரசர் விருதும் கிடைத்துள்ளது. இவரைக் குறித்து நான், ரிகொபெர்த்தா மெஞ்சூ (1983) என்ற வாழ்க்கை வரலாறும் இவரே ஆக்கிய கிராசிங் பார்டர்சு தன்வரலாறும் எழுதப்பட்டுள்ளன.

ரிகொபெர்த்தா மெஞ்சூ
2009இல் ரிகொபெர்த்தா மெஞ்சூ.
பிறப்புரிகொபெர்த்தா மெஞ்சூ தும்
9 சனவரி 1959 (1959-01-09)
லஜ் சிமெல், குயிசே, குவாத்தமாலா
தேசியம்குவாத்தமாலா
பணிசெயற்பாட்டாளர், அரசியல்வாதி
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (1992)
ஆதூரியா இளவரசு விருதுகள் (1998)
ஆசுடெக் ஈகிள் ஓர்டர் (2010).
வலைத்தளம்
ரிகொபெர்த்தா மெஞ்சூ தும்

மெஞ்சூ யுனெசுக்கோ நல்லெண்ண தூதர் ஆவார். உள்நாட்டு அரசியல் கட்சிகளில் பங்கேற்றுள்ள மெஞ்சூ 2007ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. ""Rigoberta Menchú Tum - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Rigoberta Menchú Tum - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.