எலன் ஜான்சன் சர்லீஃப்

எலன் ஜான்சன் சர்லீஃப் (Ellen Johnson Sirleaf, பிறப்பு: 29 அக்டோபர் 1938) லைபீரிய அரசியல்வாதியும் லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவராக 2006 முதல் 2018ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவரும் ஆவார். இவரே ஆப்பிரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசத்தலைவர் ஆவார்.

எலன் ஜான்சன் சர்லீஃப்
லைபீரியாவின் 24வது குடியரசுத் தலைவர்
பதவியில்
16 சனவரி 2006  22 ஜனவரி 2018
துணை குடியரசுத் தலைவர் ஜோசஃப் போகாய்
முன்னவர் குயூடெ பிரியண்ட்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 29, 1938 (1938-10-29)
மொன்ரோவியா, லைபீரியா
அரசியல் கட்சி ஒற்றுமைக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்)
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
தொழில் பொருளியலாளர்
வர்த்தகர்
செயல்முனைப்பாளர்
சமயம் மெதடிசம்

இவர் 1979ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி அமைச்சராகப் பணிபுரிந்தவர். இராணுவப் புரட்சியை அடுத்து லைபீரியாவை விட்டு வெளியேறினார். வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு தேர்தல்களில் இரண்டாவதாக வந்தார். 2005ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சனவரி 16, 2006இல் ஆபிரிக்காவின் முதலாவதும் மற்றும் இன்றுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் லேமா குபோவீ மற்றும் தவக்குல் கர்மானுடன் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.[1]

12 செப்டம்பர் 2013 அன்று அமைதிக்கான "இந்திரா காந்தி அமைதிப் பரிசினை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முக்கர்ஜி இவருக்கு வழங்கினார்.

மேற்கோள்கள்

  1. "The Nobel Peace Prize 2011 - Press Release". Nobelprize.org. பார்த்த நாள் 2011-10-07.

வெளியிணைப்புகள்

மேடைப்பேச்சுக்கள்
அறிமுகங்களும் நேர்காணல்களும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.