இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature, சுவீடிய: Nobelpriset i litteratur) ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இலக்கியத்தில் மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.[1][2] சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக்குரியனவாக சுட்டப்பட்டாலும் படைப்பாளியின் வாழ்நாள் ஆக்கங்கள் அனைத்தும் கருத்தில் கொண்டே இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஓர் ஆண்டுக்குரிய பரிசினை சுவீடனின் இலக்கிய மன்றமான சுவீடிய அக்கடமி முடிவு செய்து அக்டோபர் மாத துவக்கத்தில் அறிவிக்கிறது.[3]

இலக்கியத்திற்கான நோபல் பரிசு
விருதுக்கான
காரணம்
இலக்கியத்தில் மிகச்சீரிய பங்களிப்புகள்
வழங்கியவர்சுவீடிய அக்கடமி
நாடுசுவீடன்
முதலாவது விருது1901
அதிகாரபூர்வ தளம்
1901இல், சல்லி புருதோம் (1839–1907), பிரெஞ்சு கவிஞர் மற்றும் கட்டுரையாளர், முதன்முதலில் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவராவார்.

மேற்கோள்கள்

  1. "The Nobel Prize in Literature". nobelprize.org. பார்த்த நாள் 2007-10-13.
  2. John Sutherland (October 13, 2007). "Ink and Spit". Guardian Unlimited Books (The Guardian). http://books.guardian.co.uk/review/story/0,,2189673,00.html. பார்த்த நாள்: 2007-10-13.
  3. "The Nobel Prize in Literature". Swedish Academy. பார்த்த நாள் 2007-10-13.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.