இட்சாக் ரபீன்

இட்சாக் ரபீன் (Yitzhak Rabin, எபிரேயம்: יִצְחָק רַבִּין , மார்ச் 1, 1922நவம்பர் 4, 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத் தலைவரும் ஆவார்[1]. இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும், 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1994 ஆம் ஆண்டில், சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது[2]. 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

1993, செப்டம்பர் 13 இல் ஒஸ்லோ அமைதி மாநாட்டில் இட்சாக் ரபீன், பில் கிளிண்டன், யாசர் அரபாத்
இட்சாக் ரபீன்
Yitzhak Rabin
இஸ்ரேலின் 5வது பிரதமர்
பதவியில்
ஜூலை 13, 1992  நவம்பர் 4, 1995
முன்னவர் இட்சாக் சமீர்
பின்வந்தவர் சிமோன் பெரெஸ்
பதவியில்
ஜூன் 3, 1974  ஏப்ரல் 22, 1977
முன்னவர் கோல்டா மேயர்
பின்வந்தவர் மெனாக்கெம் பெகின்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 1, 1922(1922-03-01)
ஜெருசலேம், பாலஸ்தீனம் (இப்போது இஸ்ரேல்)
இறப்பு நவம்பர் 4, 1995(1995-11-04) (அகவை 73)
டெல் அவீவ், இஸ்ரேல்
அரசியல் கட்சி கூட்டமைப்பு, தொழிற் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லியா ரபீன்
பிள்ளைகள் டாலியா
யுவால்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. ""Yitzhak Rabin - Biographical".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 18 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. ""Yitzhak Rabin - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.