ஏதென்ஸ்

ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1896 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.

Αθήνα
அதீனா
ஏதென்ஸ்
ஏதென்ஸ் அக்ராபொலிஸ்

கிரேக்க நாட்டில் அமைந்திடம்
நாடுகிரீஸ்
மாகாணம்ஆட்டிகா
பகுதிஏதென்ஸ்
மாவட்டங்கள்7
அரசு
  மாநகராட்சித் தலைவர்நிகீட்டாஸ் காக்லமானிஸ் (ND)
பரப்பளவு
  நகரம்38.964
  Metro411.717
ஏற்றம்70
மக்கள்தொகை (2001)
  நகரம்745
  அடர்த்தி19
  பெருநகர்3
  பெருநகர் அடர்த்தி9
நேர வலயம்EET (ஒசநே+2)
  கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே+3)
அஞ்சல் குறியீடுகள்10x xx, 11x xx, 120 xx
தொலைபேசி குறியீடு21
இணையதளம்cityofathens.gr

வரலாறு

ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை (Acropolis) விளங்கியது. இரும்புக் கால புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக எழுச்சிகளின் விளைவாகக் கி.மு.508 இல் கிளீஸ்தீன்ஸினால் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பயனாகச் சனநாயக முறைமை ஏதென்சில் தோற்றம்பெற்றது.

புவியியல்

பென்டெலி மலை

அட்டிகாவின் மத்திய சமவெளியில் நான்கு மலைகளின் நடுவே ஏதென்ஸ் அமைந்துள்ளது. இவற்றுள் மிக உயரமான பர்ணிதா மலை வடக்கேயும், இரண்டாவது உயரமான பென்டெலி மலை வடகிழக்கிலும், ஹைமெட்டஸ் மலை கிழக்கிலும், ஏகலியோ மலை மேற்கிலும் அமைந்துள்ளன. பர்ணிதா மலை தேசிய பூங்காவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது 1413 மீட்டர் (4,636 அடி) உயரமானது.

ஏதென்ஸ் நகரம் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் மிகப்பெரியது லைக்காவிற்றஸ் ஆகும்.

காலநிலை

மாறிமாறி வரும் நீண்ட உலர் கோடைகாலமும் மிதமான குளிர்காலமும் ஏதென்ஸின் காலநிலையின் சிறப்பம்சமாகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கிடைக்கின்றது. சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 414.1 மில்லிமீட்டர் ஆகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வரண்ட மாதங்கள் ஆகும். இக்காலத்தில் அரிதாக இடியுடன் கூடிய மழை பெய்கின்றது. குளிர்காலத்தில் அதிக மழைவீழ்ச்சி காணப்படுகின்றது. சனவரி மாத சராசரி வெப்பநிலை 8.9 °C ஆகும். ஏதென்ஸின் வடக்கு நகர்ப்புறங்களில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு காணப்படுகின்றது.

அரசு

ஏதென்ஸ், 1834இல் கிரேக்கத்தின் தலைநகரானது. ஏதென்ஸ் மாநகராட்சி அட்டிகா பிரதேசத்தின் தலைநகரமும் ஆகும்.

அட்டிகா பிரதேசம்

3,808 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய அட்டிகா பிரதேசத்தினுள் அடங்கும் ஏதென்ஸ் மாநகர்ப்பகுதி 2,928.71 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. அட்டிகா பிரதேசமானது 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஏதென்ஸ் மாநகரப்பகுதி

39 சதுர கி.மீ. பரப்பளவுடைய இம்மாநகர்த்தின் மக்கட்டொகை, 2001இல் 664,046 ஆகும். இம்மாநகராட்சியின் தற்போதைய மேயர் கியொர்கோஸ் கமினிஸ் ஆவார். இது நிர்வாக நோக்கத்திற்காக 7 மாநகர மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கட் பரம்பல்

2001இல் ஏதென்ஸ் மாநகரத்தின் உத்தியோகபூர்வ மக்கட்டொகை 664,046 ஆகும். மேலும் நான்கு பிரதேசப்பகுதிகளை உள்ளடக்கியதான ஏதென்ஸ் பெரும்பகுதியின் மக்கட்டொகை 2,640,701 ஆகும்.

கல்வி

கிரேக்க தேசிய நூலக நுழைவாயில்

பனெபிஸ்டிமியோ சாலையிலுள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் பழைய வளாகம், தேசிய நூலகம் மற்றும் ஏதென்ஸ் கல்வியகம் என்பன 19ம் நூற்றாண்டில் முக்கிய மூன்று கல்விக்கூடங்கள். பற்றின்சன் சாலையிலுள்ள ஏதென்ஸ் பல்தொழில்நுட்ப பாடசாலை, நகரத்தின் இரண்டாவது உயர் கல்வி நிறுவனம் ஆகும்.

சுற்றுலாத்துறை

மிக நீண்ட காலமாகவே சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏதென்ஸ், 2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளையொட்டி உட்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் என்பவற்றில் பெரிதும் மேம்பாடடைந்துள்ளது. இங்கு பல அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன.

போக்குவரத்து

சிறந்த புகைவண்டி மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் ஏதென்ஸின் மிகப்பெரிய பேருந்து சேவை நிறுவனமாக 'ஏதெல்' விளங்குகின்றது. ஏதென்ஸ் பெருநகரப் புகைவண்டி சேவை மின்சார புகைவண்டிகளை உள்ளடக்கியதான சிறந்த போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் பன்னாட்டு விமான நிலையம் ஏதென்ஸ் நகருக்குக் கிழக்கே சுமார் 35 கி.மீ. தூரத்திலுள்ளது.

பூங்காக்கள்

பர்ணிதா தேசிய பூங்கா பாதைகள், நீரூற்றுக்கள், குகைகள் என்பவற்றால் வரையறுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக விளங்குகின்றது. சுமார் 15.5 ஹெக்டேயரில் அமைந்துள்ள ஏதென்ஸ் தேசிய பூந்தோட்டம் நகர மத்தியில் 1840இல் உருவாக்கப்பட்டது. ஏதென்ஸின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையான அட்டிகா மிருகக்காட்சி சாலை 20 ஹெக்டேயர் பரப்பளவுடையது. இங்கு 400 இனங்களைச் சேர்ந்த சுமார் 2000 விலங்குகள் காணப்படுகின்றன.

விளையாட்டு

தொன்மையான விளையாட்டுப் பாரம்பரியம் கொண்ட ஏதென்ஸில் 1896 மற்றும் 2004இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 2004 கோடை கால ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏதென்ஸ் ஒலிம்பிக் மைதானம் புனரமைக்கபட வேண்டிய சுழல் ஏற்பட்டது, பின் புனரமைக்கப்பட்ட மைதானம் உலகின் மிக அழகான மைதானம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நாட்டின் மிகப் பெரிய மைதானமான இது 1994 மற்றும் 2007 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தியது.

ஒலிம்பிக் போட்டிகள்

1896 ஒலிம்பிக் போட்டிகள்

பிரென்ச் நாட்டுகாரனார பிர்ரெ டி கூபெர்டின் மூலம் 1896இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தோற்றுவிக்கப்பட்டது. அவரது முயற்சிகளால் ஏதென்ஸ் நகரம் முதல் நவீன ஒலிப்பிக் போட்டியை நடத்தும் அரிய வாய்ப்பைப் பெற்றது. 1896யில் 123,000ஆக இருந்த நகரின் மக்கள் தொகை, இந்நிகழ்வு நகரின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள உதவியது.

சகோதர நகரங்கள்

மேற்கோள்கள்

  1. "Barcelona internacional – Ciutats agermanades" (Spanish). © 2006–2009 Ajuntament de Barcelona. பார்த்த நாள் 13 July 2009.
  2. "Beijing Sister Cities". City of Beijing. www.ebeijing.gov.cn. பார்த்த நாள் 3 January 2007.
  3. "Twinnings of the city". City of Beirut. www.beirut.gov.lb. மூல முகவரியிலிருந்து 21 February 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 January 2008.
  4. "Twinning with Palestine". Twinning With Palestine. மூல முகவரியிலிருந்து 1 February 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 January 2008.
  5. "::Bethlehem Municipality::". www.bethlehem-city.org. பார்த்த நாள் 10 October 2009.
  6. "Academy of Economic Studies – Short History of Bucharest". Bucharest University of Economics. பார்த்த நாள் 1 August 2008.
  7. "Chicago Sister Cities". City of Chicago. www.chicagosistercities.com. பார்த்த நாள் 3 January 2007.
  8. "Ciudades Hermanas" (Spanish). Municipalidad del Cusco. www.municusco.gob.pe. பார்த்த நாள் 25 January 2008.
  9. Erdem, Selim Efe (3 November 2003). "İstanbul'a 49 kardeş" (in Turkish). Radikal (Radikal). http://www.radikal.com.tr/haber.php?haberno=94185. பார்த்த நாள்: 25 January 2008.
  10. "Los Angeles Sister Cities". City of Los Angeles. www.lacity.org. மூல முகவரியிலிருந்து 4 January 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 January 2007.
  11. "Moscow International Relations". Moscow City Government (June 2007). பார்த்த நாள் 31 July 2008.
  12. "Gemellaggi" (Italian). Comune di Napoli. மூல முகவரியிலிருந்து 26 September 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 September 2008.
  13. "Nicosia:Twin Cities". Nicosia Municipality. www.nicosia.org.cy. பார்த்த நாள் 25 January 2008.
  14. "International Cooperation: Sister Cities". Seoul Metropolitan Government. www.seoul.go.kr. மூல முகவரியிலிருந்து 10 December 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 January 2008.
  15. "Twinning Cities: International Relations". Municipality of Tirana. www.tirana.gov.al. மூல முகவரியிலிருந்து 16 February 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 January 2008.
  16. "Protocol and International Affairs: Sister-City Agreements". District of Columbia. os.dc.gov. மூல முகவரியிலிருந்து 29 January 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 January 2008.
  17. "International Cooperation: Sister Cities: Athens". Yerevan Municipality. www.yerevan.am. பார்த்த நாள் 26 January 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.