கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்

கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (கி.ஐ.கோ.நே.) (ஆங்கிலம்:Eastern European Summer Time - EEST) என்பது ஒ.ச.நே.+03:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு மூன்று மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய, வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தைப் பயன்படுத்துகின்றன.

ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, உருசியா மற்றும் துனீசியாவைக் குறிக்கின்றது.

பயன்பாடு

பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:

  • பெலருஸ், 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • பல்கேரியா, 1979 முதல்
  • சைப்ரஸ், 1979 முதல்
  • எஸ்தோனியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • பின்லாந்து, 1981 முதல்
  • கிரீஸ், 1975 முதல்
  • இஸ்ரேல், 1948 முதல்
  • ஜோர்டான், 1985 முதல்
  • லத்வியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • லெபனான், 1985 முதல்
  • லித்துவேனியா, 1989-97 மற்றும் 2003 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது; 1998-2002 காலப்பகுதியில் மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • மோல்டோவா, 1932-40 மற்றும் 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • ருமேனியா, 1932-40 மற்றும் 1979 முதல்
  • ரஷ்யா (கலினின்கிராட்), 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது. 2011 மார்ச் முதல் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
  • சிரியா, 1983 முதல்
  • துருக்கி, 1970-78 மற்றும் 1985 முதல்; 1979-83 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • உக்ரைன், 1992 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.